'உன் முன்மாதிரியான துணிச்சலால் நாடே பெருமை கொள்கிறது.. வெல்கம்பேக் அபிநந்தன்'.. பிரதமர் மோடி!

முகப்பு > செய்திகள் > India news
By |

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நல்லெண்ண அடிப்படையில் இந்திய வீரர் அபிநந்தனை விடுவிப்பதாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதனையடுத்து இன்று அபிநந்தனை ராவல்பிண்டி ராணுவ முகாமிலிருந்து விமானம் மூலம் லாகூருக்கு அழைத்துவந்து, அங்கிருந்து சாலை மார்க்கமாக வாகா எல்லை வழியாக இந்தியாவுக்கு கொண்டுவந்து ஒப்படைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனால் வாகா எல்லையில் பலத்த பாதுகாப்புடன் போலீஸார் குவிந்தனர். அதுமட்டுமல்லாமல் பொதுமக்கள் பலரும் இந்திய தேசியக்கொடியுடன் வாகா எல்லையில் 'WelcomeHomeAbhi' என்கிற பதாகைகளை ஏந்தியபடி காத்திருக்க தொடங்கினர்.

பின்னர் வீரர்கள் புடைசூழ அழைத்துவரப்பட்ட அபிநந்தன், இந்திய ராணுவத்தினரிடம் இரவு 9 மணி அளவில் அட்டாரி- வாகா எல்லையின் வழியாக அழைத்துவரப்பட்டு ஒப்படைக்கப்பட்டார். ராணுவ துணை விமான அதிகாரி ஆர்ஜிகே கபூர் தங்களிடம் அபிநந்தன் ஒப்படைக்கப்பட்டதாகவும், விமானத்தில் இருந்து விழுந்ததால் அவருக்கு முதற்கட்டமாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளவிருப்பதாகவும் தெரிவித்ததோடு, அபிநந்தன் ஒப்படைக்கப்பட்டதால் இந்திய ராணுவ விமானத்துறை மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்தார். 

அபிநந்தன் மீண்டு வந்தது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி,‘தாயகத்துக்கு திரும்பிய அபிநந்தனுக்கு வரவேற்புகள். உமது முன்னுதாரணமான- முன்மாதிரியான அசாத்திய துணிச்சலைப் பார்த்து இந்த நாடே பெருமை கொள்கிறது’ என்று கூறியிருக்கிறார். மேலும் நம் (இந்தியாவின்) ஆயுத படைகள்தான் 130 கோடி இந்தியர்களுக்கும் உத்வேகம் தருவதாக குறிப்பிட்டுள்ளார்.

NARENDRAMODI, INDIAPAKISTAN, ABHINANDANVARTHAMAN, ABHINANDANRELEASED, IAFPILOT, AIRSURGICALSTRIKE

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்