என் குழந்தை எங்க மேடம்?.. குப்பத்தொட்டியில வீசிட்டேன்.. அலட்சியத்தால் பச்சிளம் குழந்தையை நாய் குதறிய அவலம்!

முகப்பு > செய்திகள் > India news
By |

அரசு மருத்துவமனையில் பிறந்த சில நிமிடங்களில் இறந்த குழந்தையில் சடலத்தை நாய் கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கர்னூர் என்ற பகுதியில் முரளி-நாகம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் 4 -வது முறையாக கர்ப்பம் தரித்த நாகம்மா பரிசோதனைக்காக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றுள்ளார்.

அப்போது நாகம்மாவுக்கு பிரசவ வலி ஏற்படவே, உடனே அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் குழந்தைக்கு எடை குறைவாக இருப்பதாக கூறி ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறித்தியுள்ளனர்.

இதனை அடுத்து நேற்று ஓசூர் அரசு மருத்துவமனையில் நாகம்மா சேர்க்கப்பட்டு, அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த குழந்தையின் எடை குறைவாக இருந்ததால், பச்சிளம் குழந்தைகளின் வார்ட்டுக்கு மாற்றி கண்காணித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இரவு 8 மணியளவில் குழந்தை இறந்துவிட்டதாக கூறி நாகம்மாவிடம் மருத்துவர்கள் ஒப்படைத்துள்ளனர். இதனைக் கேட்ட நாகம்மா மற்றும் அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்து செய்வதறியாது இருந்துள்ளனர். மேலும் பிரசவ வார்டில் இருந்த மற்ற தாய்மார்களும் இறந்த குழந்தையை வைத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் சோகமடைந்த உறவினர்கள் இரவு நேரத்தில் எங்கு செல்வது என தெரியாமல், குழந்தையின் சடலத்தை ஒரு ப்ளாஸ்டிக் பையில் வைத்து கழிவறையில் வைத்துள்ளனர். அதிகாலை குழந்தையின் சடலத்தை எடுத்து செல்லலாம் என கழிவறைக்கு சென்று பார்த்த போது குழந்தை இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்து அருகில் இருந்த துப்புரவு பணியாளரிடம் விசாரித்துள்ளனர். இதனை கேட்ட துப்புரவு பணியாளர் யார் இங்கே உங்களை குழந்தை வைக்க சொன்ன, அதை நான் குப்பைத்தொட்டியில் வீசி விட்டேன் என அலட்சியமாக பதிலளித்துள்ளார்.

இதனை அடுத்து அங்கு சென்று பார்த்த போது குழந்தையின் சடலம் இல்லாததால் தேடிப் பார்க்க ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் ஒரு குழந்தையை கை, கால், தலை போன்றவற்றை நாய் ஒன்று கடித்துக் குதறிக்கொண்டிருந்ததைப் பார்த்த ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BABY, DIED, HOSPITAL, DOG, BIZARRE

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்