“மோடிக்கு ஆதரவாக ஓட்டு கேட்பவர்களுக்கு இதெல்லாம் தண்டனையா?”.. சர்ச்சையில் சிக்கும் எம்.எல்.ஏ!
முகப்பு > செய்திகள் > India newsபிரதமர் மோடி பற்றிய சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றினை பேசிய கர்நாடக மாநில மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்எல்ஏ பலராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரசுடன் இணைந்து போட்டியிடவுள்ள தேவகவுடா தலைமையில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏ சிவலிங்கா கவுடா, அரசிக்ரே பகுதியில் பிரச்சாரம் செய்தபோது, மோடிக்கு ஆதரவாக வாக்குக் கேட்பவர்களைப் பற்றிய கருத்து ஒன்றினை கூறியுள்ளார்.
பாரத பிரதமர் மோடி குறித்தும், பாஜக பற்றியும் கடுமையாக பேசிய அவர், மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை பற்றியும், ஒவ்வொரு இந்திய குடிமகன்களின் கணக்கிலும் 15 லட்சம் வரவு வைப்பதாக மோடி வாக்கு கொடுத்தது பற்றியும் எம்.எல்.ஏ விமர்சித்தார்.
அப்போது பேசியவர், பிரதமர் மோடிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பவர்களின் கன்னத்தில் அறையுங்கள் என்றும் மோடி என்று கோஷமிடுபவர்களின் பல்லை உடையுங்கள் என்றும் சர்ச்சை பேச்சுகளை பேசியுள்ளார். இம்மாநிலத்தை பொறுத்தவரை, கலாபுர்கி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன் நிற்கிறார். இதேபோல் ஹசன் தொகுதியில் பிரஜ்வல் ரேவண்ணா பாஜக சார்பில் ஏ.மஞ்சு போட்டியிடுகிறார். மறைந்த கன்னட நடிகரும், காங்கிரஸ் கட்சியின் எம்.பியுமான அம்பரீஷ் மனைவி சுமலதா மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட, இவருக்கு பாஜக தன் ஆதரவினை அளித்துள்ளது.
இந்த நிலையில் இப்படி ஒரு கருத்தினை ஒரு எம்.எல்.ஏ கூறியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
OTHER NEWS SHOTS
தொடர்புடைய செய்திகள்
- ’17 வருடத்துக்கு பின் பள்ளிக்கு மின்சாரம்.. ‘தேர்தலே காரணம்’.. நன்றி சொல்லும் மக்கள்!
- காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடு! இழுபறியில் சிவகங்கை!
- ஓலாவிற்கு தடை..! அரசு எடுத்த அதிரடி முடிவு..! காரணம் என்ன?
- 'மோடியின் செல்வாக்கு'... இந்த மாநிலத்தில் தான் 'படுமோசமா இருக்கு'... ஆய்வு முடிவுகள்!
- 'நாங்க போட்டியிட்டா அதிமுகவுக்கு வாக்குகள் பிரியும்'...நிபந்தனையற்ற ஆதரவு...ஜெ.தீபா அதிரடி!
- ‘மாணவர்களுக்கு லேப்டாப்.. தமிழ்நாட்டுக்கு செயற்கைக்கோள்’.. அனல் பறக்கும் அமமுக தேர்தல் அறிக்கை!
- ‘மோடியின் தொலைநோக்கு பார்வையால் ஈர்க்கப்பட்டேன்’.. பாஜக -வில் இணைந்த பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்!
- ‘பவர் ஸ்டாரை முன்னிறுத்தும் உண்மையான இகுக நாங்கள்தான்’.. உறுதிப்படுத்திய மாநில தலைவர்!
- 5 மாடி கட்டிட விபத்து: பலி எண்ணிக்கை அதிகரிப்பு.. சோகத்தில் ஆழ்ந்த மக்கள்!
- ‘ஓட்டு கேட்க போகும்போது பாஜக தொண்டர்கள் எப்படி போகணும்?’.. தமிழிசையின் பதில்!