10-ஆம் வகுப்பு தேர்வறையில் அதிகாரிகள் நடத்திய விதத்தால் மாணவி எடுத்த விபரீத முடிவு!

முகப்பு > செய்திகள் > India news
By |

10-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளியில் நிகழ்ந்த அவமானத்தால் தற்கொலை செய்துகொண்டதால் பெரும் பரபரப்பு உண்டாகியுள்ளது.

சத்தீஸ்கரில் உள்ள ஜாஷ்பூரில் பழங்குடியின மாணவி ஒருவர் 10 -ம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த மார்ச் 1-ஆம் தேதி தேர்வு எழுதச் சென்றுள்ளார். அங்கு வந்த அதிகாரிகள் அவரை சந்தேகப்பட்டு தனி அறைக்கு அழைத்துச் சென்று ஆடைகளை களைக்கச் சொல்லி சோதனை நடத்தி, பின்னர் அவரிடம் காப்பி அடிப்பதற்கான துண்டுச் சீட்டு பேப்பர் எதுவும் இல்லை என அறிந்ததும் அவரை மீண்டும் தேர்வு எழுத அனுமதித்துள்ளனர். ஆனால் மாணவியோ தேர்வெழுதாமல் வீட்டுக்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

வீட்டில் 2 நாட்கள் யாரிடமும் பேசாமல் இருந்த மாணவி திடீரென அக்கிராமத்தின் மரமொன்றில் தூக்கிட்டு இறந்துள்ளார். இதை அறிந்த சக மாணவிகள், அம்மாணவி மரணமடைந்ததற்குக் காரணம் தேர்வறையில் அவருக்கு நேர்ந்த அவமானம்தான் என்றும் அதனால் மனவுளைச்சலில் இவ்வாறு செய்துகொண்டதாகவும் கூறியுள்ளனர்.

இதுபற்றி பேசிய மாணவியின் சகோதரர், தன் சகோதரியிடம் தேர்வு எழுதியது பற்றி கேட்டதற்கு, அதிகாரிகள் தன்னை எவ்வாறு நடத்தினார்கள் என்பதையும், அதனால் தன்னால் தேர்வு எழுத முடியாமல் வந்துவிட்டதாகவும் சகோதரி சொன்னதாகக் கூறியவர், சிரித்தபடி அம்மாணாவி, தான் சாகப்போவதாக சொன்னதாகவும் கூறியுள்ளார். ஆனால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அடுத்த பரீட்சைக்கு நன்றாக படிக்கச் சொன்னதாகவும் கூறி, மாணவியின் சகோதரர் வேதனை தெரிவிக்கிறார்.

வளரிளம் பருவப்பெண்ணை தேர்வுமுறை அதிகாரிகள் நடத்திய விதத்தால், மாணவி மனமுடைந்து தற்கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதுள்ளது. இந்த சம்பவம் பற்றிய முழு விசாரணை நடைபெறும் என அப்பகுதி  கலெக்டர் ரவி மிட்டல் தெரிவித்துள்ளார்.

EXAM, SCHOOLSTUDENT, CHHATTISGARH, BIZARRE, SUICIDE, SAD

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்