உலகளவில் ட்விட்டரில் டிரெண்டாகி வரும் #SayNoToWar
முகப்பு > செய்திகள் > India newsபுல்வாமா பகுதியில் நடந்த கொடூரத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று அதிகாலை இந்திய விமானப்படை தீவிரவாதிகளின் முகாம் மீது தாக்குதல் நடத்தியது. இதில் மிராஜ் 2000 ரக போர் விமானங்களின் மூலம் 1000 கிலோ அளவிலான குண்டுகளை இந்திய ராணுவம் வீசியது. இதனால் காஷ்மீரின் ஆக்கிரமிப்பு பகுதியான பால்கோட் என்னுமிடத்தில் இருந்த பயங்கரவாதிகளின் முகாம் முற்றிலுமாக அழிக்கபட்டதாக விமானப்படை தெரிவித்தது.
இந்திய விமானப்படை நடத்திய இந்த தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் மைத்துனர் மவுலான யூசஃப் அசார் உட்பட பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே தெரிவித்தார்.
இதனை அடுத்து இந்திய எல்லையை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நுழைந்து குண்டுவீசியதாகவும், ஆனால் இந்திய விமானங்கள் திருப்பித் தாக்கியதாகவும் இந்திய ராணுவம் கூறியது. ஆனால் தற்போது இந்திய விமானி கைது செய்யப்பட்டிருப்பதை அது தொடர்பான வீடியோவுடன் பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டது.
இந்நிலையில் இந்திய விமானி காணாமல் போனது மிக வருத்தமளிப்பதாகவும், விமானி நலமுடம் வீடு திரும்பவார் என நம்புகிறேன் எனவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். காணாமல் போன விமானியை பத்திரமாக மத்திய அரசு மீட்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே பேசிய பாகிஸ்தான் பிரதமர், போரால் பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படாது எனவும் சரியான பேச்சுவார்த்தைதான் பிரச்சனைக்கு தீர்வாக இருக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் போர் வேண்டாம் என உலக அளவில் #SayNoToWar என்னும் ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி முதல் இடத்தில் உள்ளது.
OTHER NEWS SHOTS