‘5 சகோதரிகளை கரைசேர்க்கனும்னு ஜம்முவுக்கு போனான்’.. பெருத்த சோகத்தில் உறவினர்!

முகப்பு > செய்திகள் > India news
By |

ஜம்மு- காஷ்மீரின் புல்வாமா பகுதியில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் தற்கொலைப்படைத் தாக்குதலால் உயிரிழந்ததை அடுத்தும், ராணுவ விமானி அபிநந்தன் சிறைபிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதை அடுத்தும் , இந்தியாவின் எல்லை பரபரப்பாக இருந்துவருகிறது.

இந்த நிலையில் மீண்டும் ஜம்மு பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் மிக  அண்மையில் கையெறிக் குண்டு தாக்குதலுக்கு 30 பேர் படுகாயமடைந்துள்ள சம்பவம் மேலும் அதிரவைத்தது. அதில் 17 வயதான இளைஞரும், இன்னொருவரும்  தீவிர சிகிச்சை பெற்றுவருவதாக அம்மாநில டிஜிபி தகவல் அளித்திருந்தார். ஆனால் பின்னர் இதில் ஹரித்வாரின் டோடா கல்யன்பூர் கிராமத்தைச் சேர்ந்த 17 வயதான ஷாரிக் என்கிற இளைஞன் மட்டும் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ள செய்தியையும் அவரே ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த 17 வயது இளைஞன் ஷாரிக் 2 வருடங்களுக்கு முன்பு, உடல்நிலை பாதிப்பால் இறந்துபோன தந்தையை பறிகொடுத்துவிட்டு,  தனது படிப்பையும் பாதியில் நிறுத்திவிட்டு குடும்ப பாரத்தைச் சுமந்துகொண்டு வேலைக்குச் சென்றுவந்துள்ளார். 5 சகோதரிகளையும் 1 சகோதரரையும்  கொண்ட ஷாரிக் ஜம்முவில் உள்ள தனது மாமா வீட்டில் தங்கி தையல் கற்றுக்கொண்டு வேலைக்குச் சென்று வீட்டைக் காப்பாற்ற வந்தவர்.

அவர்தான் இந்த தாக்குதலில் பலியாகியிருக்கிறார். ஷாரிக்கின் கிராமத் தலைவர் வாஜித் முகமது இதுபற்றி பேசும்போது, விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த ஷாரிக் மிகவும் சாதுவான பையன், எல்லாரிடமும் கனிவாக நடந்துகொள்ளுபவன், கடவுள் நம்பிக்கை கொண்ட ஷாரிக், ஜம்முவுக்குச் சென்று தன் சகோதரிகளை கரைசேர்க்க நினைத்தான். அங்கு எந்நேரமும் தாக்குதல் நடக்கும் என தெரிந்தும் குடும்ப சூழலை சமாளிக்க அவன் எடுத்த தீர்க்கமான முடிவுக்கு கடைசியில் ஷாரிக்கின் தாய் சம்மதித்தார். ஆனால் அவரது இறப்பு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்று கூறியுள்ளார்.

JAMMUBUSSTANDBLAST, JAMMUTERRORATTACK, SAD

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்