நீங்க 'டீடெயில்' கொடுத்தா மட்டும் போதும்... 'OTP' குறித்து கவலையில்லை...நாங்க பொறுப்பா 'சுட்ருவோம்'... வங்கி பாதுகாப்பை 'கேள்விக்குள்ளாக்கிய' கொள்ளை...
முகப்பு > செய்திகள் > இந்தியாபணபரிவர்த்தனை சேவை தொடர்பாக சில வசதிகள் தருவதாக போன் செய்த நபரிடம் வங்கி விவரங்களை அளித்த மருத்துவரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.17 லட்சம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தான் ஓடிபியை பகிர்ந்து கொள்ளாத போதும் தனது பணம் திருடப்பட்டிருப்பது குறித்து அவர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
மும்பையைச் சேர்ந்த மருத்துவர் பிரகாஷ் மகாதேவ். இவர் பாரத ஸ்டேட் வங்கியில் வங்கி கணக்கு வைத்துள்ளார். அவருக்கு கடந்த ஜனவரி 8-ம் தேதி தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. எதிர்முனையில் பேசிய நபர், தான் பணபரிவர்த்தனை சேவை தொடர்பாக சில வசதிகள் செய்து தருவதாகவும், அதற்கு வங்கிக் கணக்கின் விவரங்களை தருமாறும் கேட்டுள்ளார்.
வங்கி அதிகாரியைப்போல தெளிவாக பேசியதால் சந்தேகம் அடையாத மருத்துவர் பிரகாஷ், வங்கி கணக்கு தொடர்பான விவரங்களை அளித்துள்ளார். அதன் பின் அவருக்கு ஓடிபி எனப்படும் ஒரு முறை பயன்படுத்தும் ரகசிய எண் ஒன்று வந்துள்ளது. உடனே ஏதோ தவறு நடப்பதாக உணர்ந்த அவர் உடனடியாக வங்கிக்கு தொடர்பு கொண்டு தனது கணக்கை முடக்கியுள்ளார். அதன்பின் ஜனவரி 21ம் தேதி வங்கிக்கு சென்ற அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது வங்கிக் கணக்கிலிருந்து 17 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். குறிப்பாக தான் ஓடிபியை பகிர்ந்து கொள்ளாத போதும் பணம் எடுக்கப்பட்டது எப்படி என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஓடிபி என்னும் ரகசிய எண் பாதுகாப்பானது என நாம் நம்பி வரும் நிலையில் இப்படி ஒரு திருட்டு நடைபெற்றிருப்பது வங்கி பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- யப்பா! என்ன டேஸ்ட்டு... உலகளவில் அதிகம் 'தேடப்பட்ட' உணவு இதுதான்... முதலிடத்தை பிடித்த 'இந்திய' நகரம்!
- ‘இதுக்கு என்ன தண்டனை? கூகுள்ல தேடியும் கிடைக்கல’... போலீசாரை பதறவைத்த ‘ஐடி’ ஊழியர்... ‘அடுத்து’ நடந்த ‘நெகிழ்ச்சி’ சம்பவம்...
- உலகிலேயே அதிக போக்குவரத்து நெருக்கடி... 'பெங்களூரு' முதலிடம்... "ஏம்பா சென்னை 'பல்லாவரம்', 'பெருங்களத்தூர்' பக்கம் ஆய்வு செஞ்சீங்களா..."
- திருமணத்தை 'மீறிய' உறவில்... அதிக 'ஆர்வம்' காட்டும் இந்தியர்கள்... முதலிடத்தில் இருப்பது 'இந்த' நகரம் தானாம்!
- ‘காதலனுடன் சேர சிறப்பு பூஜை’.. ‘செல்போனில் பேசிய மர்மநபர்’.. லட்சக்கணக்கில் பணத்தை இழந்த இளம்பெண்..!
- ‘என்னையும், என் ஃப்ரண்டையும் கடத்திட்டாங்க’... 11 வயது ‘சிறுமியின்’ ஃபோனால் ‘பதறிப்போய்’ ஓடிய... ‘பெற்றோருக்கு’ காத்திருந்த ‘அதிர்ச்சி’...
- 'மும்பையில்' இனி 24 மணி நேரமும் 'கடைகள்' திறந்திருக்கும்... சார் எங்க ஊர்ல எப்ப சார் கடையை திறப்பீங்க...? 'சென்னை' மக்கள் ஏக்கம்...
- 'உல்லாசத்திற்கு' அழைத்த 'நடன அழகி'... 'புத்தாண்டு' அன்று தொழிலதிபருக்கு 'பொங்கல்' வைத்த கொள்ளைக் கும்பல்... தமிழ் படத்திலிருந்து 'கான்செப்ட்' திருடி 'கைவரிசை'...
- இந்தியாவுக்குள் 'என்ட்ரியை' போட்டது 'கொரோனா' வைரஸ்... 2 பேருக்கு தனி அறையில் 'சிகிச்சை'... "எங்கே தெரியுமா?..."
- 'தண்ணீர் பாட்டிலால் சிறுமிக்கு நடந்த சோகம்'... 'மும்பையில் பயங்கரம்'...