கணவரின் சந்தேக டார்ச்சரை பொறுக்க முடியாத போலீஸ் மனைவி துப்பாக்கியால் சுட்ட சம்பவம்!

முகப்பு > செய்திகள் > India news
By |

ரயில்வே போலீஸ் ஃபோர்ஸ் எனப்படும் ஆர்பிஎப்-ல் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருபவர் 39 வயதான சுனிதா மிஞ்ச். இவருக்கும் இவரது 42 வயதான கணவர் தீபக் ஸ்ரீவத்சவாவுக்கும் திருமணமாகி கிட்டத்தட்ட 2 ஆண்டுகளே ஆகியுள்ளன.

கணவர் தீபக்கும் ரயில்வே ஊழியர்தான் என்பதால் தங்களுக்குள் கருத்து வேறுபாடோ,  ஒளிவுமறைவோ உண்டாவதற்கான வாய்ப்பில்லை என்றும், ஒருவரின் பணிச்சுமையையும் மனச்சுமையையும் இன்னொருவர் புரிந்துகொள்ள முடியும் என நினைத்துதான் சுனிதா மிஞ்ச் நிம்மதியாக இருந்துள்ளார். ஆனால் திருமணமாகிய தொடக்க காலத்திலேயே தீபக்கின் சந்தேகக் கணைகள் சுனிதா மிஞ்ச் மீது சரமாரியாக பாயத் தொடங்கியுள்ளன.

தொடர்ந்து தீபக் சுனிதாவிடம் சந்தேகத்தின் பேரில் பேசவும் தகராறு  செய்யவும் தொடங்கியுள்ளார். இதனால் இருவருக்குமான பேச்சுறவு எப்போதும் சண்டை சச்சரவாகத்தான் இருக்கக் கூடிய சூழல் உண்டானது. வாய்மொழியாக எதையாவது பேசத் தொடங்கினால் கூட இருவருக்கும் இடையில் அது வாக்குவாதமாக மாறிவிடும் அபாயம் இருந்தது.

இப்படி ஒரு நிலையில்தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சத்தீஸ்கரின், பதபாரா ரயில்வே நிலையத்தில், சுனிதா பணியில் இருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு வந்த தீபக், சுனிதாவின் நடத்தை பற்றி சுனிதாவிடம் மீண்டும் தகாதமுறைகளில் பேசியுள்ளார். பொறுத்துப் பார்த்த சுனிதா ஒரு கட்டத்தில் தன்னை மீறிய, தன் தன்மானத்தை மீறீய கோபத்தால் தன்னிடம் இருந்த காவலர் ரிவால்வரை எடுத்து வானத்தை நோக்கி ஒரு முறையும் சற்றும் தாமதிக்காமல் கணவர் தீபக்கை நோக்கி 2 முறையும் சுட்டதில், அவர் சம்பவ இடத்தில் சுருண்டு விழுந்தார்.

இதில் தனது இடுப்புப் பகுதியில் புல்லட் ஏறியதால் தீபக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் சிகிச்சையில் அபாய கட்டத்தை தாண்டிவிட்ட நிலையில், மனைவி சுனிதா கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

BIZARRE, CRIME, GUNSHOT

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்