சுழன்றடித்த பேய்மழை.... 27 பேர் உயிரிழப்பு... 400 பேர் படுகாயம்...

முகப்பு > செய்திகள் > India news
By |

நேபாளத்தில் சுழன்றடித்த புயல்மழைக்கு ஏராளமானோர் படுகாயமடைந்துள்ள சம்பவம், அங்குள்ள மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேபாள நாட்டின் தென்பகுதியில், இந்திய எல்லைப் பகுதியில் ஞாயிறன்று மாலை புயலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்தக் கனமழை காரணமாக பரா, பர்சா மாவட்டங்கள்  கடுமையாகப் பாதிக்கப்பட்டன. ஏராளமான வீடுகள், இடிந்து விழுந்தன. மரங்கள் வேரோடு சாய்ந்தன.

இதனால் ஏற்பட்ட விபத்துகளில் 27 பேர் உயிரிழந்தனர். 400-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கனமழை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று  கூறப்படுகிறது. 

மீட்புப் பணிகளில் தேசிய அவசரகால மீட்புப் படையினருடன் ராணுவம் மற்றும் காவல்துறையினர் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். புயல் மழையால் பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே மழை மற்றும் புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

NEPAL, RAINSTORM, KILLED, WOUNDED, NEPALPM, SHARMAOLI, HOSPITAL

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்