ட்விட்டரில் மோடிக்கு வாழ்த்து கூறி கேலி செய்த ராகுல் காந்தி!
முகப்பு > செய்திகள் > India news
இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய மோடி, ‘மிஷன் சக்தி திட்டம்’ மூலம் இந்த சோதனை நடத்தப்பட்டது. இது இந்தியாவுக்கு மிகப் பெரிய வெற்றி என்றும், நாம் எல்லோரும் பெருமைப்பட வேண்டிய நேரம் என்றும், மேலும் நாம் தரை வழியாக, நீர் வழியாக மற்றும் ஆகாய வழியாக மட்டுமல்லாமல், இனி நாம் விண்வெளி வழியாகவும் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று கூறினார். மேலும், இந்தச் சாதனையைச் செய்வதற்கு உறுதுணையாய் இருந்த விஞ்ஞானிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும். இனி இந்தியா, இந்த சோதனையின் மூலம் மேலும் வலுவடைந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த சோதனைக்குப் பிறகு, விண்வெளி மூலம் போர் தொடுக்கக் கூடாது என்பதில் இந்தியா தெளிவாக இருக்கிறது என்று அவர் தெரிவித்தார். மேலும், இந்தியா, எப்போதும் அமைதியை விரும்பும் நாடாகத்தான் இருந்துள்ளது. அதே நேரத்தில் நம்மை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுப்போம். இந்தியா தற்போது முக்கிய விண்வெளி சக்தியாக உருவெடுத்துள்ளது என்று பிரதமர் கூறியுள்ளார்.
இந்நிலையில், ‘மிஷன் சக்தி' வெற்றி குறித்து பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த பின்னர், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, டி.ஆர்.டி.ஓ அமைப்புக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், அவர் பிரதமர் மோடிக்கும், ‘உலக தியேட்டர் தின' வாழ்த்துகளைக் கூறிக் கொள்ள விரும்புகிறேன்' என்று ராகுல் மோடியை கேலி செய்யும் விதத்தில் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
மேலும், ராகுல் காந்தியைத் தவிர்த்து, சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோரும், பிரதமர் மோடியின் உரையை விமர்சித்துள்ளனர். இந்நிலையில், தேர்தல் நேரத்தில் மோடியின் இந்த உரை, மிகுந்த சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது.
OTHER NEWS SHOTS
தொடர்புடைய செய்திகள்
- தேர்தல் யுத்தம்: இருபெரும் கட்சிகளின் வியூகம்.. தென் சென்னையில் யாருக்கு வெற்றி?
- ‘விண்வெளியில் 3 நிமிடத்தில் இந்தியாவின் மிஷன் சக்தி சாதனை’: பிரதமரின் பெருமிதமான அறிவிப்பு!
- 40 தொகுதிக்கு 810 பேர் வேட்புமனு தாக்கல்! இன்றுடன் நிறைவடைந்தது வேட்புமனு தாக்கல்!
- அட இங்கையும் பிரச்சாரமா? தனி ஸ்டைலில் பிரச்சாரம் செய்யும் பிரியங்கா காந்தி!
- மக்களவைத் தேர்தலில் நிற்கும் ‘ரஜினி - கமல் - விஜயகாந்த் படங்களில் நடித்த’ நாயகிகள்!
- காங்கிரஸ் ஜெயித்தால்! பாகிஸ்தானுக்கு தீபாவளி பாஜக மூத்த தலைவர் சர்ச்சைப் பேச்சு!
- “மோடிக்கு ஆதரவாக ஓட்டு கேட்பவர்களுக்கு இதெல்லாம் தண்டனையா?”.. சர்ச்சையில் சிக்கும் எம்.எல்.ஏ!
- 'கமல் போட்டியிடுகிறாரா'?...பல்லாக்கில் ஏறி இருக்குறத விட...அதை சுமக்க தான் எனக்கு புடிக்கும்!
- ’17 வருடத்துக்கு பின் பள்ளிக்கு மின்சாரம்.. ‘தேர்தலே காரணம்’.. நன்றி சொல்லும் மக்கள்!
- காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடு! இழுபறியில் சிவகங்கை!