"அவர் மனைவிக்கு ஒரு மெசேஜ் தான் அனுப்புனேன்.. அடி பின்னிட்டாரு.. காப்பாத்துங்க சார்".. போலீசிடம் பாதுகாப்பு கேட்ட நபர்.. போலீஸ் போட்ட "நச்" கமெண்ட்.. வைரல் ட்வீட்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பஞ்சாப் மாநிலத்தில் இன்னொருவரின் மனைவிக்கு மெசேஜ் அனுப்பிய நபரை, அப்பெண்ணின் கணவர் தாக்கியிருக்கிறார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட நபர் காவல்துறையினரிடம் பாதுகாப்பு கேட்ட ட்வீட் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | உலகத்தின் பவர்ஃபுல் பாஸ்போர்ட்களின் List.. இத மட்டும் வச்சிருந்தா 193 நாட்டுக்கு விசாவே எடுக்க வேண்டாமாம்.. இந்தியாவின் ரேங்க் என்ன?

இணைய வசதிகள் நம்ப முடியாத அளவுக்கு வளர்ந்துவிட்ட இந்த காலத்தில், காவல்துறையும் அதனை மக்களின் பயன்பாட்டுக்காக உபயோகப்படுத்தி வருகிறது. குறிப்பாக சமூக வலை தளங்கள் மக்களை எளிதில் சென்றடைய அவர்களுக்கு மிகவும் உதவுகிறது. எச்சரிக்கைகள், அவசர தகவல்கள், விழிப்புணர்வு ஆகியவற்றை காவல்துறையினர் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்கள் மூலமாக மக்களிடையே கொண்டு சேர்க்கின்றனர்.

இந்நிலையில், பொதுமக்களும் தங்களது சந்தேகங்கள் மற்றும் அவசர தேவைகளுக்கு காவல்துறையினரை சமூக ஊடகங்கள் வழியாக தொடர்புகொள்கின்றனர். இப்படி பொது மக்களின் கேள்விகளுக்கு காவல்துறையினரும் உடனடியாக பதில் அளித்து வேண்டிய உதவிகளையும் செய்து வருகிறார்கள். இந்நடைமுறை சமீப காலங்களில் கணிசமான அளவு அதிகரித்திருக்கிறது.

மெசேஜ்

அந்த வகையில், பஞ்சாப்பை சேர்ந்த ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வித்தியாசமான கோரிக்கை ஒன்றை காவத்துறையினருக்கு வைத்திருக்கிறார். இது நெட்டிசன்களை வியப்படைய செய்திருந்த நிலையில், அதற்கு பஞ்சாப் காவல்துறை போட்டுள்ள கமெண்ட் தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது. அவர் ஒரு பெண்மணிக்கு  I Like You என மெசேஜ் அனுப்பியிருக்கிறார். இதனால், அந்த பெண்மணியின் கணவர் தன்னை தாக்கிவிட்டதாகவும் தனக்கு பாதுகாப்பு வழங்கும்படியும் காவல்துறைக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்.

சுஷாந்த் தத் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,"நான் ஒருவருடைய மனைவிக்கு  I Like You என மெசேஜ் அனுப்பியிருந்தேன். இதனால் கோபமடைந்த அந்த பெண்ணின் கணவர் நேற்று இரவு என்னுடைய வீட்டிற்க்கு வந்து என்னை கடுமையாக தாக்கினார். நான் மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்டபோதும் அவர் மனமிறங்கவில்லை. இப்போது என்னுடைய பாதுகாப்பு குறித்து ஐயம் எழுந்துள்ளது. உதவி செய்து என்னுடைய உயிரை காப்பாற்றுங்கள். அவர் இன்றும் வந்து என்னை தாக்கக்கூடும்" என குறிப்பிட்டிருக்கிறார். மேலும், அப்பகுதி காவல்துறை அதிகாரியையும் தனது பதிவில் டேக் செய்திருக்கிறார் அவர்.

நடவடிக்கை

இந்நிலையில், இந்த பதிவிற்கு பதில் அளித்துள்ள பஞ்சாப் மாநில காவல்துறை,"எதை எதிர்பார்த்து ஒரு பெண்ணுக்கு நீங்கள் தேவையற்ற முறையில் செய்தி அனுப்பினீர்கள் என்று தெரியவில்லை. ஆனால் அவர்கள் உங்களை அடித்திருக்கக் கூடாது. அவர்கள் உங்கள் மீது எங்களிடம் புகாரளித்திருக்க வேண்டும். சரியான சட்டப் பிரிவுகளின் கீழ் நாங்கள் உங்களுக்குச் சேவை செய்திருப்போம். இந்த இரண்டு குற்றங்களும் சட்டப்படி உரிய முறையில் கவனிக்கப்படும்" என குறிப்பிட்டுள்ளனர்.

அதற்கு அடுத்த ட்வீட்டில் அருகில் உள்ள காவல்நிலையத்துக்கு சென்று புகார் அளிக்கும்படி அவருக்கு காவல்துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர். இந்த ட்வீட் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Also Read | Breaking: இலங்கையின் புதிய அதிபர் யார்.?.. தேர்தல் முடிவுகளை வெளியிட்டது நாடாளுமன்றம்..!

POLICE, PUNJAB, TWITTER, QUESTION, PUNJAB POLICE REPLY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்