அட இந்த டீலிங் நல்லா இருக்கே! தேர்தலில் ஓட்டு போட்டா கூடுதல் மதிப்பெண்கள்! ஆச்சரியப்பட வைக்கும் தகவல்!

முகப்பு > செய்திகள் > India news
By |

 

மக்களவைத் தேர்தலில் 100 சதவீத வாக்கு எண்ணிக்கை இலக்கை அடையச் செய்யும் வகையில், நூதன முறையில் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது தனியார் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் வாக்களித்தால், அம்மாணாக்கர்களுக்கு 4 மதிப்பெண் கூடுதலாக வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்த்தில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் வாக்களித்தால் அம்மாணாக்கர்களுக்கு 4 மதிப்பெண் கூடுதலாக வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு மதிப்பெண் கூடுதலாக வழங்கப்படும் என்று அறிவித்தால், பிள்ளைகள் அவர்களது பெற்றோர்களை வாக்களிக்க வற்புறுத்துவார்கள். பள்ளியில் கிடைக்கும் இந்த 4 மதிப்பெண்கள் நாட்டின் தலையெழுத்தையே மாற்றுவதற்கு அச்சாரமாக இருக்கும். இதைக் கருத்தில் கொண்டே இத்தகைய புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு முதன்மை செயலர் சசிகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும், இவ்வாறு வாக்களிக்கும் பெற்றோர்களுக்கு ஒப்புகைச்சீட்டு வழங்கப்படும் என்றும், அதை பள்ளிகளில் காண்பித்தால், போதும் சம்பந்தப்பட்ட பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு தேர்வில் 4 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்படும்.

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்