திருவள்ளுவர் திருநாளில் அந்த மகானை வணங்குகிறேன்...! பிரதமர் மோடி தமிழில் டுவிட்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாதிருவள்ளுவர் தினமான இன்று அந்த மகானை வணங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி பாரதியார், திருவள்ளுவர் போன்ற தமிழ் அறிஞர்களின் பாடல் வரிகளிலிருந்து அவ்வப்போது மேற்கோள் காட்டி பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் திருவள்ளுவர் தினம் மற்றும் மாட்டுப்பொங்கல் பண்டிகைகள் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், "திருவள்ளுவர் திருநாளில் அந்த மகானை வணங்குகிறேன்" என பிரதமர் மோடி தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதில், திருவள்ளுவர் திருநாளில் அந்த மகானை வணங்குகிறேன். அவரது உன்னத எண்ணங்களும் இலக்கியப் படைப்புக்களும் பல கோடி மக்களுக்கு, இன்றும் வலிமையை வழங்குகின்றன. சமூக நீதி, சமத்துவம் மற்றும் கருணையை நோக்கி நாம் தொண்டாற்றிட, அவை நம்மை ஊக்குவிக்கின்றன என பதிவிட்டுள்ளார்.
நேற்று பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் தமிழில் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'நான் அவரோட தீவிர பக்தன்'...'தினமும் பாலாபிஷேகம்'...'பிரதமர் மோடி'க்கு கோவில் கட்டிய விவசாயி!
- 'சொல்லிக்கிட்டே இருக்கேன்! அடங்க மாட்ட?'... ரிப்போர்ட்டரின் போனை பிடுங்கி பாக்கெட்டில் போட்ட பிரதமர்!
- 'கிட்டத்தட்ட 40 வருஷம்'.. 100 முறைக்கு மேல் முயன்று திருவள்ளுவரை வரைஞ்சது யார் தெரியுமா?!
- திருவள்ளுவர் சிலைக்கு காவித்துண்டு, ருத்ராட்ச மாலை அணிவித்த விவகாரம்..! அர்ஜூன் சம்பத் கைது..!
- ‘திருவள்ளுவர் சிலையை அவமதித்த மர்ம நபர்களால் பரபரப்பு’.. ‘தனிப்படை அமைத்து விசாரிக்க டிஜிபி உத்தரவு’..
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்!
- ‘தாளாற்றித் தந்த பொருளெல்லாம்’.. ‘திருக்குறளை மேற்கோள்காட்டி பேசி’.. ‘தாய்லாந்தில் அசத்திய பிரதமர் மோடி’..
- ‘பூட்டு உடைந்து’... ‘பின்பக்க சுவரில் துளையிட்டு'... 'அதிர்ந்துபோன மக்கள்'!
- செயற்கைக்கோள்களை சுட்டு வீழ்த்தும் மிஷன் சக்தி சாதனை வெற்றி: பிரதமர் மோடி பெருமிதம்!
- 'துப்புரவு தொழிலாளர்களின் கால்களை கழுவி'...மரியாதை செய்த 'பிரதமர்'!