ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் உயர்வா? அதிர்ச்சியளிக்கும் காரணம்!
முகப்பு > செய்திகள் > India news
ஏப்ரல் முதல் தேதியிலிருந்து, தமிழகத்தில் 20 சுங்கச்சாவடிகளில் ரூ. 5 முதல் ரூ.15 வரை சுங்கக் கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 43 சுங்கச்சாவடிகளில் 20ல் மட்டும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. மேலும் நெடுஞ்சாலைகள் விரிவாக்கம் போன்ற பணிகள் நடைபெறும் இடத்தில் கட்டணம் முடிவுசெய்யப்படவில்லை.
இதன்படி ஆத்தூர், சென்னசமுத்திரம், கிருஷ்ணகிரி, வாகைகுளம், பரனூர், வானூர், ஸ்ரீபெரும்புதூர், வாணியம்பாடி, சூரப்பட்டு ஆகிய இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என நெடுஞ்சாலைத் துறை ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னையிலிருந்து பெங்களூரு, சேலம் மற்றும் மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 6 சுங்கச்சாவடிகளும் அடங்கும். இந்த கட்டண உயர்வு அறிவிப்பு அப்பகுதியில் தினசரி பயணித்து வரும் வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கட்டண உயர்வு தொடர்பாக பேசிய அதிகாரிகள், ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பின்னர் சுங்கச்சாவடிகளில் வாகனப்போக்குவரத்து நெரிசல் குறைந்திருப்பதாக தெரிவித்தனர். மேலும், உயர்த்தப்படும் கட்டணம் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், தமிழகத்தில் குறிப்பிட்டப்பட்டுள்ள 20 சுங்கச்சாவடிகளில் ரூ. 5 முதல் ரூ. 15 வரை சுங்கக் கட்டணம் உயர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
OTHER NEWS SHOTS