‘பான் கார்டுடன் ஆதாரை இணைக்கும்’.. ‘காலக்கெடு நீட்டிப்பு’.. ‘இணைப்பது எப்படி?’..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பான் கார்டுடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடுவை 7-வது முறையாக நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவிட்டுள்ளது

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் ஆதாருடன் இணைக்காவிட்டால் அக்டோபர் 1 முதல் பான் கார்டு செல்லுபடி ஆகாது என மத்திய நேரடி வரிகள் வாரியம் எச்சரித்தது. அதன்பிறகு புதிதாக விண்ணப்பித்தே பான் கார்டு பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பான் கார்டுடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடுவை வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

பான் கார்டுடன் ஆதாரை இணைப்பது எப்படி?

1. http://incometaxindiaefiling.gov.in என்ற தளத்திற்கு செல்லவும்.

2. அதில் பான், ஆதார் எண், ஆதாரில் உள்ள உங்களுடைய பெயர், கேப்ட்சா ஆகியவற்றை பூர்த்தி செய்யவும்.

3. பின் Link Aadhar எனும் பட்டனை க்ளிக் செய்தால் பான் கார்டு ஆதாருடன் இணைக்கப்படும்.

4. ஏற்கெனவே உங்களுடைய பான் கார்டு ஆதாருடன் இணைக்கப்பட்டிருந்தால் அது குறித்த தகவலும் இங்கு வரும்.

PAN, AADHAAR, CARD, LINKING, DATE, EXTENDED, HOWTO, LINK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்