‘இப்படி எல்லாம் கூடவா பண்ணுவாங்க..?’ அரசு மருத்துவமனையில் நடந்த அவலம்..
முகப்பு > செய்திகள் > இந்தியாஅரசு மருத்துவமனையில் போதிய ஸ்ட்ரெட்சர்கள் இல்லாததால் ஆண் நோயாளியையும், பெண் நோயாளியையும் ஒரே ஸ்ட்ரெட்சரில் வைத்து அழைத்துச் சென்ற சம்பவம் மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தூரில் உள்ள மஹாராஜா யஷ்வந்த் ராவ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சங்கீதா என்பவர் கணவருடன் வந்துள்ளார். அவருக்கு காலில் ஏற்பட்டிருந்த எலும்பு முறிவுக்காக எக்ஸ்ரே எடுக்க அழைத்துச் செல்லப்பட்ட போது தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றிப் பேசியுள்ள அவருடைய கணவர், “சிகிச்சை பெற்றாக வேண்டுமே என வேறு வழியின்றி பொறுத்துக் கொண்டோம்” எனக் கூறியுள்ளார்.
இதுகுறித்த வீடியோக்கள் வெளியாகி வைரலான நிலையில், மருத்துவமனையின் கண்காணிப்பாளர், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நிதி ஆயோக் வெளியிட்ட சுகாதாரத்துறைப் பட்டியலில் 18வது இடத்தைப் பிடித்துப் பின்தங்கியுள்ளது மத்திய பிரதேசம். இதற்கு முன்னரே இங்கு ஸ்ட்ரெட்சர் இல்லாமல் நோயாளியை போர்வையில் வைத்து இழுத்துச் சென்றது, உயிருடன் இருக்கும்போதே இறந்துவிட்டதாகக் கூறி நோயாளியை ஒரு நாள் முழுக்கப் பிணவறையில் வைத்திருந்தது எனப் பல சம்பவங்கள் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- புகைப்பிடிப்பவர்களே.. 'இனிமேலாச்சும்'.. 'இப்படி செய்யாம இருங்க'... நெஞ்சை உருக்கும் புகைப்படம்!
- ‘கரைபுரண்டு ஓடிய வெள்ளத்தில் சிக்கிய நபர்’.. அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ காட்சிகள்!
- ‘யாராவது குடிக்க கொஞ்சம் தண்ணி தாங்களேன்’. நிர்வாணமாக கெஞ்சிய முதியவர்! நெஞ்சை உறைய வைத்த சம்பவம்!
- இறந்ததாக அறிவித்த டாக்டர்கள்.. ‘புதைக்கும் முன் நடந்த அதிசயம்..’
- 'வீட்ல போய் ஆடுங்க.. போங்க'.. குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் 'டிக்டாக்' டான்ஸ் ஆடிய நர்ஸ்களுக்கு கட்டாய விடுப்பு!
- 'அரசு மருத்துவமனை'.. சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த 4 வயது குழந்தைக்கு.. 'நடந்த கொடூரம்'!
- 'கருக்கலைப்புக்கு போனா இப்படியா பண்ணுவீங்க'... 'மருத்துவர்களின் செயலால்' ... 'அதிர்ந்த பெண்' !
- கர்ப்பிணிப் பெண்ணை சுட்டுக் கொன்ற சொந்த சகோதர்கள்..! போலிஸாரிடம் அளித்த பகீர் வாக்குமூலம்!
- ‘உயிருடன் இருந்தவரை இறந்ததாகக் கூறிய டாக்டர்..’ பிரேதப் பரிசோதனையின்போது தெரியவந்த பரிதாபம்..
- ‘தாயின் செயலால் அதிர்ந்துபோய் நின்ற மகள்..’ கண்முன்னே தந்தைக்கு நடந்த பயங்கரம்..