‘நம்பி கைகுலுக்கியது தப்பா போச்சே'.. வேட்பாளரின் மோதிரத்தை உருவிய சோகம்!

முகப்பு > செய்திகள் > India news
By |

வேட்பாளர்கள் வீடு தேடி வந்து ஓட்டு கேட்கும்போது அவர் மீதான விமர்சனங்களை பல விதமாக பலரும் வைப்பதுண்டு. ஆனால் வேப்டாளரிடம் தன் கைவரிசையை,க் காட்டியுள்ள நபர் ஒருவரின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தங்கள் கட்சிக்கான வேட்பாளர் லிஸ்ட்டை அறிமுகப்படுத்தியதோடு, பிரச்சாரத்தில் களமிறங்கி, தொண்டர்களையும் வாக்காளர்களையும் சந்தித்து வருகிறது. இக்கட்சியில்தான் புகழ்பெற்ற தெலுங்கு நடிகரான மோகன் பாபு மிக அண்மையில் தன்னை இணைத்துக்கொண்டார்.

இந்த நிலையில் இக்கட்சியின் சார்பாக, இக்கட்சியின் தலைவரான ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.சர்மிளா ஆந்திராவின் குண்டூர் பகுதியில் தம் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அம்மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். பின்னர் பிரச்சாரம் செய்த பேருந்தில் இருந்தடியே, தம் தொண்டர்களை நோக்கி கைகொடுத்து அவர்களிடம் கைகுலுக்கினார்.

அந்த சமயம் யாரும் எதிர்பாராத விதமாக, சர்மிளாவிடம் கைகுலுக்கிய நபர் ஒருவர், சர்மிளாவின் கையில் இருந்த மோதிரத்தை உருவிக்கொண்டு ஓடியுள்ளார். தொண்டர்களின் முன்னிலையில் நடந்துள்ள இந்த சம்பவம் அங்கிருந்த பலரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் திருடிய நபரை அடையாளங் காண முடியவில்லை என தெரிகிறது. முன்னதாக விஜயவாடாவிலும் இதே போல் சில சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

LOKSABHAELECTIONS2019, YSRCONGRESS, YSRSHARMILA, BIZARRE

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்