'எப்படி நடந்துச்சுனே தெரில'.. 'நல்லா கர்பா டான்ஸ் பண்ணிக்கிட்டு இருந்தவரு.. திடீர்னு'.. நவராத்திரி கொண்டாட்டத்தில் 'சோகம்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியா முழுவதும் நவராத்திரக் கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், ராஜஸ்தானில் நடந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

ராஜஸ்தான் மாநிலத்தில் நவராத்திரியைக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, கர்பா நடனம் ஆடிக்கொண்டிருந்த ஒருவர், ஆடிக்கொண்டிருக்கும்போது, யாரும் எதிர்பாராத வண்ணம் திடீரென மயங்கி விழுந்ததை அடுத்து, அங்கு கூடியிருந்தவர்கள் பதறியுள்ளனர்.

அதன் பின்னர், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது. ஆனால் அவரை மருத்துவப் பரிசோதனைக்காகக் கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்துவிட்டதாக வந்தத் தகவலை அடுத்து அனைவரும் சோகத்தில் மூழ்கினர்.

ராஜஸ்தான் மாநிலம் மவுண்ட் அபு பகுதியில், ஹோட்டல் ஒன்றில் சிலர் கும்பலாகக் கூடியதோடு, வட்ட வடிவில் சூழ்ந்து உற்சாகமாக ஆடிக்கொண்டிருந்தபோது, அங்கு அவர்களுடன் சேர்ந்து ஆடிக்கொண்டிருந்த சூரத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் என்பவர்தான் இவ்வாறு மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மட்டுமன்றி, அவர் கீழே விழும்போது அவரது வாயில் ரத்தம் வந்ததாக அவருடன் இருந்த யோகேஷ் என்பவர் குறிப்பிட்டுள்ளார்.

RAJASTHAN, GARBA, NAVRATRI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்