அடேங்கப்பா.. யோகி ஆதித்யநாத்திற்கு கோவில் கட்டிய பக்தர்.. இதுக்கெல்லாம் அந்த சபதம் தான் காரணமாம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு கோவில் ஒன்றை எழுப்பியுள்ளார். இது பலரையும் திகைப்படைய செய்திருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | இறப்புக்கு முன்னாடி இங்கிலாந்து ராணி எழுதிய கடிதம்.. அதுவும் 5 வயசு சிறுவனுக்கு.. பிரிச்சு பாத்துட்டு ஒருநிமிஷம் எல்லாரும் கலங்கி போய்ட்டாங்க..!

அரசியல் கட்சி தலைவர்களை தீவிரமாக ஆதரித்துவரும் தொண்டர்கள் குறித்து நிறையவே கேள்விப்பட்டிருப்போம் சில சமயங்களில் நேரிலும் பார்த்திருப்போம். அந்த வரிசையில் உத்திர பிரதேச மாநிலத்தில் ஒருவர் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு கோவில் கட்டியுள்ளார். இந்த கோவிலில் ராமர் போலவே யோகியின் சிலை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.

கோவில்

உத்திர பிரதேச மாநிலத்தின் அயோத்தியா மாவட்டத்தில் உள்ளது பூர்வா கிராமம். அயோத்தியாவில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் இந்த கிராமத்தில் தான் இந்த கோவில் கட்டப்பட்டிருக்கிறது. இதே கிராமத்தை சேர்ந்த பிரபாகர் மௌரியா என்பவர் இந்த கோவிலை எழுப்பியுள்ளார். பக்தி பாடல்களை பாடுவதையே தொழிலாக கொண்ட பிரபாகர் இந்த கோவிலை கட்ட 8.5 லட்சம் செலவழித்திருக்கலாம் என்கிறார்கள் உள்ளூர் மக்கள்.

கையில் அம்பு மற்றும் வில்லுடன் இருக்கும் வகையில் யோகியின் சிலை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த சிலை ராஜஸ்தானில் செய்யப்பட்டு அங்கிருந்து கொண்டுவந்து இந்த கோவிலில் வைக்கப்பட்டிருக்கிறது. கோவில் கட்டும் எண்ணம் தனக்கு வந்தது குறித்து பேசிய பிரபாகர்," அயோத்தியாவில் யார் ராமர் கோவில் கட்டினாலும் அவருக்கு நான் கோவில் கட்டுவேன் என கடந்த 2015 ஆம் ஆண்டு சபதம் எடுத்துக்கொண்டேன். அதன்படி தற்போது யோகி ஆதித்யநாத் அவர்களது ஆட்சியில் அயோத்தியாவில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. ஆகவே அவருக்கு நான் கோவில் கட்டியிருக்கிறேன்" என்றார்.

மோடி கோவில்

முன்னதாக மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஒருவர் கோவில் கட்டியது இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. புனேவின் அவுந்த் பகுதியை சேர்ந்த மயூர் முண்டே என்பவர் 1.5 லட்ச ரூபாய் செலவில் இந்த கோவிலை கட்டியிருந்தார். கடந்த ஆண்டு சுதந்திர தின விழா அன்று இந்த கோவில் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Also Read | நைட்ல காதலியை பார்க்கப்போன இளைஞர்.. மறைஞ்சு நின்ன இளம்பெண்ணின் அம்மா.. கொஞ்ச நேரத்துல கேட்ட அலறல் சத்தம்..!

UTTARPRADESH, YOGI ADITYANATH, AYODHYA, MAN BUILT TEMPLE FOR YOGI ADITYANATH, YOGI ADITYANATH STATUE, யோகி ஆதித்யநாத்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்