'கண்ணாடி, சிசிடிவி கேமராவெல்லாம் ஒடச்சு'... 'இதுக்கா இத்தன ரணகளம்???'... 'விரைந்து வந்த போலீசார்'... 'விசாரணையில் வெளிவந்த முக்கிய தகவல்!!!...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தானேயில் ஒரு ஏடிஎம் மையத்திலிருந்து எந்திரத்தை கொள்ளையர்கள் தூக்கிச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் உசாட்னே கிராமம் அருகே தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் ஒன்று உள்ளது. சம்பவத்தன்று அதிகாலை நேரத்தில் அந்த ஏடிஎம் மையத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள், ஏடிஎம் மையத்தின் கண்ணாடி பகிர்வு மற்றும் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா ஆகியவற்றை உடைத்து சேதப்படுத்திவிட்டு, ஏடிஎம் எந்திரத்தை பணத்துடன் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதுபற்றி அப்பகுதியினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது விசாரணையில், காணாமல் போன எந்திரத்தில் ரூ 6 ஆயிரம் மட்டுமே பணம் இருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் ஏடிஎம் எந்திரத்தை  கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்