"25 கோடி ரூபா லாட்டரில ஜெயிச்ச ஆள ஞாபகம் இருக்கா?".. லேட்டஸ்ட்டா வெளியான தகவல்.. "பம்பர் பரிசு அடிச்சா கவனமா இருங்கப்பா"
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளா, துபாய், கனடா உள்ளிட்ட பல பகுதிகளில் லாட்டரிகள் விற்பனை இருக்கும் சூழலில் இதில் வெற்றி பெற்று பல கோடி ரூபாய் பரிசு வென்ற நபர்கள் குறித்த செய்திகளை நாம் நிறைய கடந்து வந்திருப்போம்.
Also Read | கைவிட்ட கணவன்.. வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாத நிலை.. எக்குத்தப்பா அடிச்ச அதிர்ஷ்டம்.. கோடீஸ்வரி..!
அந்த வகையில் கடந்த ஆண்டு கேரளா மாநிலத்தில் திருவோண பம்பர் லாட்டரி குலுக்கலில் முதல் பரிசாக 25 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அனூப் என்பவர் வென்றிருந்தார்.
லாட்டரி டிக்கெட்டை மகனின் உண்டியல் சேமிப்பில் இருந்த பணத்தை கொண்டு வாங்க அது அவருக்கு அதிர்ஷ்டம் ஆகவும் மாறி இருந்தது.
குடும்ப சூழ்நிலை காரணமாக, வெளிநாடு போகவும் அனூப் திட்டம் போட்டிருந்த சமயத்தில் தான் லாட்டரியில் இத்தனை கோடி பணம் கிடைத்து அவரது வாழ்க்கையையே தலைகீழாக புரட்டி போட்டிருந்தது. கேரளா மாட்டுமில்லாமல், இந்திய அளவிலும் அனூப் அறியப்பட்டிருந்தார். ஆனால், லாட்டரி ஜெயித்த சந்தோசம், கொஞ்ச நாளிலேயே தொல்லையாக அவருக்கு மாற தொடங்கி இருந்தது.
இதற்கு காரணம், அனூப்பிற்கு லாட்டரியில் 25 கோடி ரூபாய் பரிசு விழுந்ததால் பலரும் உதவி கேட்டு அவரது வீட்டிற்கு வர தொடங்கி உள்ளனர். இதனால் சொந்த வீட்டிற்க்கே வர முடியாத ஒரு சூழல் உருவாகி தனியாக வீடு எடுத்தும் தங்கி வந்த அனூப், இது தொடர்பாக வேதனையுடன் வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
லாட்டரியில் பணம் வென்றதால் சற்று மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், இதற்கு பணம் கிடைக்காமலே இருந்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார். லாட்டரியில் இத்தனை கோடி ஜெயித்த நபர் வேதனையுடன் பகிர்ந்த வீடியோ, அதிக பரபரப்பை உண்டு பண்ணி இருந்தது. இதன் பின்னர், அனூப் பற்றிய தகவல் எதுவும் வெளிவராமல் இருந்த சூழலில், தற்போது அவர் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி திருவனந்தபுரம் மணக்காடு ஜங்ஷனில் லாட்டரி விற்பனை நிலையம் ஒன்றை அனூப் தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. 25 கோடி ரூபாய் பம்பர் பரிசு கிடைத்த பிறகும் அனூப் பலமுறை லாட்டரி சீட்டு வாங்கியதாகவும் அதில் ஐந்தாயிரம் ரூபாய் வரை பரிசு கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றது. அதேபோல லாட்டரி பரிசு பெற்ற கைராசிக்காரர் என்பதால் அவரது கையில் இருந்து லாட்டரி வாங்க பல பேர் கடைக்கு வருவார்கள் என்ற நிலையில் லாட்டரி விற்பனை நிலையம் ஒன்றை தொடங்கி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
மேலும் தற்போது வேறு ஏஜெண்டிடம் இருந்து லாட்டரி வாங்கி விற்பனை செய்து வரும் அனூப், விரைவில் தனியாக ஒரு ஏஜென்ட்டை எடுக்கும் திட்டத்தையும் வைத்துள்ளதாக தெரிகிறது. இது பற்றி பேசும் அனூப்பின் மனைவி, லாட்டரியில் பரிசு கிடைத்தவர்கள் பணத்தை கவனமாக செலவு செய்ய வேண்டும் என்றும் பம்பர் பரிசு கிடைத்தவர்களின் பெயர் வெளியில் தெரியாமல் இருப்பது நல்லது என்றும் தெரிவித்துள்ளார்.
Also Read | "இத சாப்பிட்டு தான் உசுரு பொழச்சாரா?".. 24 நாட்கள் நடுக்கடலில் தவித்த நபர்.. மிரள வைத்த பின்னணி!!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- விபத்தில் கணவரை இழந்த பெண்.. 45 வயதில் மகன் முன்னிலையில் நடந்த மறுமணம்.. நெகிழ்ச்சி சம்பவம்!!
- "ஸ்லோவா வந்து சேருறதுக்கும் ஒரு நேரம், காலம் வேணாமா?"... 27 வருஷம் கழிச்சு வீட்டுக்கு வந்த லெட்டர்!!
- "அட இது தெரியாம இருந்துட்டேனே".. ஒரே லாட்டரியில் 385 கோடி ரூபாய்.. பெண்ணின் வாழ்க்கையில் நடந்த ட்விஸ்ட்!!
- "உங்க வீட்டுக்குள்ள புதையல் இருக்கு".. மர்ம ஆசாமியின் பலே உருட்டு.. நம்பிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
- செல்ஃபி மோகத்தால் ரயிலில் ஏறிய நபர்.. டக்குனு மூடிய கதவு.. வேறு வழியின்றி 159 கி.மீ தூரம் பயணித்த சம்பவம்..!
- "விடிஞ்சா கல்யாணம்".. பல கனவுகளை மனசுல சுமந்துட்டு சிரிச்ச முகத்தோட நின்ன பொண்ணு.. திடீர்ன்னு நடந்த சோகம்!!
- "அம்மா போய்ட்டா".. குழந்தைகளை ஏமாற்றி வந்த தந்தை.. ஒன்றரை வருடம் கழித்து தெரியவந்த திடுக்கிடும் உண்மை!!
- "அதிர்ஷ்ட தேவதை தாறுமாறா கண் தொறந்துருக்கு போல".. 2 மாசத்துல 16 கோடி.. தலைகீழான பெண்ணின் வாழ்க்கை!!
- "மகளை பத்தியாச்சும் கொஞ்சம் நெனச்சு இருக்கலாம்".. வெளிநாட்டில் இருந்து ஊருக்கு திரும்பியதும் குடும்பத்துடன் நபர் எடுத்த விபரீத முடிவு!
- அன்று பீடி சுற்றும் வேலை செயத கூலி தொழிலாளி.. இன்று அமெரிக்க நீதிமன்றத்தில் நீதிபதி! யார் இந்த சுரேந்தர் K பாட்டேல்?