"இந்தியாவிற்குள் நுழைந்துவிட்டதா புதிய வகை கொரோனா???” - லண்டனிலிருந்து வந்த 8 பேருக்கு... புதிய வகை வைரஸின் அறிகுறி?!! - ‘அதிர்ச்சியை’ கிளப்பும் கேரள சுகாதாரத்துறை!!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பிரிட்டனிலிருந்து கேரளா திரும்பிய 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் பிரிட்டனிலிருந்து கேரளா திரும்பிய 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அது இங்கிலாந்தில் காணப்படும் புதிய வகை உருமாற்றம் கொண்ட வைரஸா எனக் கண்டறிய, அவர்களிடம் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.சைலஜா தெரிவித்துள்ளார்.

மேலும் இதுபற்றி பேசியுள்ள அவர், "கேரளாவின் நான்கு விமான நிலையங்களிலும் விழிப்புணர்வு அதிகரிக்கப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோழிக்கோட்டில் சுகாதாரத் துறை நடத்திய ஆய்வில் கொரோனா நோயாளிகளிடையே வைரஸில் சில மாறுபாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் இது இங்கிலாந்தில் பாதிப்பை ஏற்படுத்திய வைரஸுடன் தொடர்புடையதா எனத் தெரியவில்லை. நிபுணர்கள் இதுகுறித்து விரிவான ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர். அதேநேரம் மக்கள் பீதி அடையத் தேவையில்லை. ஆனால் மக்கள் தீவிர விழிப்புணர்வைக் கடைப்பிடிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம், இங்கிலாந்தின் சுகாதாரத் துறை அதன் மரபணு பகுப்பாய்வு மற்றும் தொற்றுநோயியல் தரவுகளின்படி, தங்கள் நாட்டில் வழக்கத்தை விட 70% வேகமாக பரவக்கூடிய கொரோனா வைரஸ் பரவுவதாக கூறியிருந்தது. இருப்பினும், லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசினில் தொற்று நோய்களின் கணித மாடலிங் மையம் நடத்திய ஆய்வில் இந்த பரவல் விகிதம் 56% என்ற அளவில் இருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து தமிழகம் உட்பட நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் விமான நிலையங்களில் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்