'கொரோனாவையே அசால்ட்டா பின்னுக்கு தள்ளிடுச்சே?!!'... 'இந்த வருஷம் இந்தியர்கள்'... 'கூகுள்ல அதிகமா தேடினது இதுதானாம்!!!'...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

2020ம் ஆண்டு கூகுளில் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட செய்திகள் என்ன என்பது பற்றிய தகவல்களை கூகுள் வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி இந்தியா உட்பட பல நாடுகளும் ஸ்தம்பித்து நின்றபோதும், லாக்டவுன், வைரஸ் பாதிப்பு என மக்களின் அன்றாட வாழ்க்கை தொடர்புள்ள செய்திகளை விடவும், ஐபிஎல் கிரிக்கெட் பற்றியே இந்தியாவில் மக்கள் கூகுளில் அதிகமாக தேடியுள்ளது தெரியவந்துள்ளது. கூகுளில் அதிகமாக தேடப்பட்ட செய்திகள் வரிசையில் ஐபிஎல்லுக்கு பிறகே கொரோனா பற்றிய செய்திகள் ள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஐபிஎல், கொரோனா வைரஸ் இவற்றை தொடர்ந்து அமெரிக்க அதிபர் தேர்தல், நிர்பயா வழக்கு, பெய்ரூட் வெடிப்பு, லாக்டவுன், சீனா-இந்தியா மோதல்கள், ஆஸ்திரேலியா காட்டுத் தீ, வெட்டுக்கிளி தாக்குதல், ராமர் கோவில் ஆகியவற்றைப் பற்றியும் இந்தியர்கள் கூகுளில் தேடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்