‘வலிமையாக இருப்போம்’ இந்திய ராணுவம் பகிர்ந்துள்ள உணர்ச்சிமிக்க கவிதை!
முகப்பு > செய்திகள் > India newsஇந்திய ராணுவம் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய வீரர்களின் வலிமை குறித்த கவிதை ஒன்றை பகிர்ந்துள்ளது. இந்த கவிதை வைரலாகி வருகிறது.
முன்னதாக ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட துணை நிலை ராணுவ வீரர்கள் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு பொறுப்பேற்றது. இந்த நிலையில், இதற்கு தக்க பதிலடியாக பாலாகோட் பகுதியில் முகாமிட்டிருந்த தீவிரவாத அமைப்பின் மீது இந்தியாவின் தரப்பில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் எனப்படும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மிராஜ் ரக போர் விமானங்களைக் கொண்டு இன்று அதிகாலை 12 விமானங்கள், சுமார் 1000 கிலோ வெடிகுண்டுகளுடன் இந்திய ரணுவப்படை சென்று பாலாகோட், சக்கோத்தி மற்றும் முஸாஃபராபாத்தில் பகுதிகளில் இயங்கிவந்த முக்கிய தீவிரவாத முகாம்களை அழித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசியலாளர்கள், விளையாட்டு வீரர்கள், திரைப்பிரபலங்கள், சமூக வலைதள வாசிகள் என பலரும் இந்தியாவின் இந்த அதிரடி தாக்குதலை பாராட்டி வரும் நிலையில், இந்திய ராணுவம் தனது ட்விட்டர் பக்கத்தில் நாம் வலிமையுள்ளவர்களாக இருப்பது குறித்த கவிதையினை பகிர்ந்துள்ளது. இந்தி கவிஞர் ராம்தாரி சிங்கால் எழுதப்பட்டு, இந்திய ராணுவத்தின் மக்கள் தொடர்புத்துறை கூடுதல் தலைமை இயக்குநர் அலுவல் ரீதியான ட்விட்டர் பக்கதில் பதிவிட்டு பின்னர், தமிழ் இந்து இணைய இதழில் வெளியான அந்தக் கவிதையின் தமிழ் வடிவத்தை இங்கு காணலாம்.
‘எதிரிக்கு முன்னால் அமைதியாகவும் கீழ்படிகிறவர்களாகவும் நீங்கள் இருந்தால், உங்களைக் கோழை என்றே எதிரிகள் கருதுவார்கள். பாண்டவர்களைக் கெளரவர்கள் நடத்தியதுபோல. வலிமையான இடத்திலும் வெற்றி பெறும் நிலையிலும் இருந்தால் மட்டுமே, உங்களால் அமைதியைப் பற்றிப் பேசமுடியும்’ என்பதுதான் ராம்தாரி சிங் எழுதிய கவிதையின் உட்கரு. இதேபோல் புல்வாமா தாக்குதல் நிகழ்ந்த சமயத்தில் கவிப்பேரரசு வைரமுத்துவும் அதுகுறித்த கவிதை ஒன்றை எழுதியது குறிப்பிடத்தக்கது.
OTHER NEWS SHOTS
தொடர்புடைய செய்திகள்
- ஆமா!..இந்திய விமானபடை எங்கள அட்டாக் பண்ணிட்டாங்க...ஆனால்?...பாகிஸ்தான் ராணுவம்!
- புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி..! 1000 கிலோ குண்டுகளை வீசியது இந்தியா..!
- 'உங்களுக்கு ராயல் சலுயூட்'...தீவிரவாத முகாம்கள் அழிப்பு...'இந்திய விமான படைக்கு குவியும் பாராட்டுகள்'!
- 'நாம ஒரு குண்டு போட்டா,அவங்க 20 குண்டு போட்டு'...நம்ம சோலிய முடிச்சிடுவாங்க...இவரா இப்படி சொன்னது?
- ‘நல்ல படிச்சு டாக்டர் ஆவான்னு நெனச்சோம், ஆனா இப்டி பண்ணுவான்னு நெனைக்கவேயில்ல’.. ஆதில் சகோதரர் வேதனை!
- 'உண்மையிலேயே நெகிழ வெச்சுட்டாங்க பா'...கொண்டாடும் ரசிகர்கள்...'சலுயூட் போட்ட நெட்டிசன்கள்'!
- 'பாகிஸ்தான் கூட விளையாடம இருந்தா'...அது 'காலில் விழுவதை விட கேவலம்'...கொந்தளித்த பிரபலம்!
- 'நடுஇரவில் திக்கு தெரியாதபோது, காஷ்மீரிகளுக்கு உதவிய சீக்கியர்கள்!'
- 6 நாளில் 6 கோடி, பலியான ராணுவ வீரர்களுக்காக பேஸ்புக்கில் நிதி திரட்டிய ‘தனி ஒருவன்’!