'நாம ஒரு குண்டு போட்டா,அவங்க 20 குண்டு போட்டு'...நம்ம சோலிய முடிச்சிடுவாங்க...இவரா இப்படி சொன்னது?

முகப்பு > செய்திகள் > India news
By |

பாகிஸ்தான் ஒரு அணு குண்டைப் போட்டால், இந்தியா 20 குண்டுகள் போட்டு பாகிஸ்தான் கதையை முடித்து விடும் என அந்நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முசாரஃப் தெரிவித்துள்ளார்.அவரின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் உறவு குறித்து துபாயில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ''இரு நாடுகளுக்கிடையேயான உறவு தற்போது அபாய கட்டத்தில் உள்ளது.பாகிஸ்தான் சவால் விடுவதற்கு முன்பு பலமுறை யோசிக்க வேண்டும்.இந்தியாவிற்கு பாடம் கற்பிக்க நிறைய வழிகள் இருக்கின்றன.பாகிஸ்தான் ஒரு அணு குண்டைப் போட்டு இந்தியாவின் கதையை முடித்து விடலாம் என கனவு காண்கிறது.ஆனால் அது சாத்தியம் அல்ல.

காரணம் நீங்கள் ஒரு குண்டை போடுவதற்குள் இந்தியா 20 குண்டுகளை போட்டு பாகிஸ்தானின் கதையை முடித்து விடும்.எனவே இதற்கு ஒரே தீர்வு பாகிஸ்தான் முதலில் 50 அணு குண்டைப் போட்டு தாக்குதல் நடத்துவது தான்.இது போன்ற தாக்குதலை நடத்தினால் இந்தியாவால் 20 குண்டுகளைப் போட்டு பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் பாகிஸ்தான் முதலில் 50 அணுகுண்டுகளைப் போடத் தயாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.அவரின் இந்த கருத்து எரிகின்ற தீயில் மீண்டும் எண்ணையை ஊற்றுவது போல் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

இதனிடையே முசாரஃப் பாகிஸ்தானிற்கு ஆதரவாக பேசுகிறாரா அல்லது எதிர்த்து பேசுகிறாரா? என பாகிஸ்தானியர்கள் குழம்பி தவித்து வருகிறார்கள்.

PAKISTAN, PULWAMAATTACK, CRPFJAWANS, PERVEZ MUSHARRAF, NUCLEAR BOMB

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்