செயற்கைக்கோள்களை சுட்டு வீழ்த்தும் மிஷன் சக்தி சாதனை வெற்றி: பிரதமர் மோடி பெருமிதம்!

முகப்பு > செய்திகள் > India news
By |

பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம் இன்று காலை நடைபெற்ற நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாற்றவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து டி.வி., ரேடியோ, சமூக வலைதளங்கள் மூலம் பகல் 11.45 மணி முதல் 12 மணி வரை நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆயினும் சற்று தாமதமாக மோடி பேசத் தொடங்கினார். விண்வெளித் துறையில் இந்தியா பெருமைப்படத்தக்க மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளதாகக் கூறினார்.

விண்வெளித்துறையில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக 4-வது பெரிய நாடாக இந்தியா வளர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.  இதுபற்றி விரிவாக பேசிய மோடி, பூமியின் கீழ் சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டிருந்த செயற்கைக்கோளை A-Sat என்ற ஆயுதம் மூலம் இந்தியா வீழ்த்தியுள்ளதாக கூறியுள்ளார்.

அதாவது, இந்திய செயற்கைக் கோள்களை பாதுகாக்கும் வகையில், விண்வெளியில் 3 நிமிடத்தில் செயற்கைக்கோள்களை சுட்டு வீழ்த்தும் மிஷன் சக்தி எனும் சாதனை வெற்றிகரமாக நிகழ்ந்ததாகவும், இந்த முயற்சி இந்திய செயற்கைக் கோள்களை பாதுகாக்கும் தற்காப்பு முயற்சிதானே தவிர, பிற நாடுகளின் செயற்கைக் கோள்களை அழிக்கும் முயற்சி அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.

விண்வெளியில் போர் நடத்துவதற்கான தனித்திறனை அடைந்துள்ள இந்தியா, தற்போது விண்வெளி போருக்கு தயாராக உள்ளதாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

NARENDRAMODI, PRIME MINISTER, MISSION SHAKTI, ANTI-SATELLITE WEAPON

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்