ரயில்வே துறையும் பாஜகவிற்கு ஆதரவாக பிரச்சாரமா? மன்னிப்பு கேட்ட ரயில்வே நிர்வாகம்! நடந்தது என்ன?

முகப்பு > செய்திகள் > India news
By |

 

'நானும் காவல்காரன்தான்'  என பொருள்ப்படும்  'மெய்ன் பி சவுக்கிதார்'  என்ற பிரசாரத்தை பாஜகவினர் மக்களவை தேர்தலில் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், பிரதமர் மேடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் தங்களது சோஷியல் மீடியா அக்கவுன்ட்டுகளில் சவுக்கிதார் என்ற பெயரை சேர்த்துக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் கத்கோடம் சதாப்தி விரைவு ரயிலில்  'மெய்ன் பி சவுக்கிதார்'  என்று எழுதப்பட்ட பேப்பர் கப்புகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதை புகைப்படம் எடுத்து சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அவை வைரலாகியதால், ரயில்வே நிர்வாகம் எப்படி பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யலாம் என்கிற கேள்வி எழுந்ததையடுத்து. சவுக்கிதார் பேப்பர் கப்புகளை ரயில்வே நிர்வாகம் திரும்பப் பெற்றுக் கொண்டது, மேலும் இந்த பேப்பர் கப்புகளை அளித்த கான்ட்ராக்டருக்கு ரூ. 1 லட்சத்தை அபராதமாக விதித்துள்ளது.

மேலும், இதுதொடர்பாக ரயில்வே நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது. ஐ.ஆர்.சி.டி.சி. ஒப்புதல் அளித்து இந்த பேப்பர் கப்புகள் வந்ததா அல்லது வேறு எந்த முறையில் இந்த தவறு நிகழ்ந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது என ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்