மாயாவதியின் அதிரடி முடிவு.. நாடாளுமன்ற அரசியலில் பரபரப்பு திருப்பங்கள்!

முகப்பு > செய்திகள் > India news
By |

நாடாளுமன்றத் தேர்தலில் மாநில, தேசிய கட்சிகள் பல, நிற்கவிருப்பதாக அறிவித்து, தங்களுக்கான சின்னம், வேட்பாளர் பட்டியல், தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவற்றை அறிவித்து பிரச்சாரத்தை துவங்கியிருக்கின்றனர்.

இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, தான் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் நிற்கப்போவதில்லை என அதிரடியாக அறிவித்துள்ளார்.

முன்னதாக சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளுக்கான 12 இடங்களில் வேட்பாளர்களை போட்டிக்காக நிறுத்தப் போவதில்லை என காங்கிரஸ் கூறியதால், கோபமான மாயாவதி, அப்படியெல்லாம பகுஜன் சமாஜ்க்கான 7 இடங்களில்  காங்கிரஸ் தங்கள் வேட்பாளர்களை நிறுத்தாமல்  தியாகம் செய்ய வேண்டாம் என்று சொல்லி, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். 

இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில், காங்கிரஸ் கட்சியுடன் எந்தவிதமான கூட்டணியும் இல்லை என்றும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தங்களது வேட்பாளர்களை நிறுத்திக்கொள்ளலாம் என்றும் எங்களுக்காக வேட்பாளர்களை நிறுத்தாமல் தியாகம் செய்யத் தேவையில்லை என்றும் மாயாவதி தெரிவித்திருந்தார். மேற்கூறிய 80 இடங்களில், சமாஜ்வாதி 37 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 38 இடங்களிலும் அஜித் சங்கின் ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சி 3 இடங்களிலும் கூட்டணியாக போட்டியிடுகின்றன.

இப்படி ஒரு சூழலில்தான், தான் எந்த தொகுதியிலும் போட்டியிடப் போவதில்லை என மாயாவதி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். தேர்தல் சூழலில் மாயாவதியின் இந்த முடிவு பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்