'பயபுள்ள எப்படி கோத்து விடுது பாரு'... 'எங்கள நம்பி பல லட்சம் பேர் வேலை பாக்குறாங்க'... 'சீனாவோட எந்த பங்கும் இல்ல'... பிரபல நிறுவனம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சீன அரசாங்கத்திற்கும், அதன் ராணுவத்துக்கும் ஹுவாய் நிறுவனத்தில் பங்கு இருப்பதாக வெளியான தகவலுக்கு அந்த நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

இந்தியாவிற்கும், சீனாவிற்கும் தற்போது எழுந்துள்ள பிரச்சனை சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியாவில் சீன பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது. இந்த சூழ்நிலையில் பிரபல நிறுவனமான, ஹுவாய் நிறுவனத்தில் சீன அரசாங்கத்திற்கும், அதன் ராணுவத்துக்கும் பங்கு இருப்பதாக ஒரு தகவல் பரவியது. தற்போது அதை மறுத்துள்ள அந்த நிறுவனம், விளக்கம் ஒன்றையும் அளித்துள்ளது.

இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஹுவாய் என்பது முற்றிலும் அதன் ஊழியர்களுக்குச் சொந்தமான ஒரு தனியார் நிறுவனம் என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம். எந்தவொரு அரசாங்க நிறுவனமோ அல்லது வெளி நிறுவனமோ ஹுவாய் நிறுவனத்தில் பங்குகளை வைத்திருக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறோம்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்