‘ரயில்நிலையங்களில்’... ‘இலவச வைஃபை’... ‘கூகுள் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு’...
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியா உள்ளிட்ட நாடுகளில் ரயில் நிலையங்களில் வழங்கப்பட்டு வரும் இலவச வைஃபை சேவையை நிறுத்திக் கொள்ள கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
கடந்த 2015 முதல் இந்தியாவில் ரயில்நிலையங்களில், ரயில்வே துறையுடன் சேர்ந்து கூகுள் நிறுவனம் இலவச வைஃபை சேவைகளை வழங்கி வந்தது. வைஃபை நிறுவது, அதனை பராமரிப்பது உள்ளிட்டவைகளை கூகுள் நிறுவனம் கண்காணித்து வந்தது. சுமார் 400 ரயில்நிலையங்களில் படிப்படியாக கூகுள் நிறுவனம் வைஃடிப சேவைகளை நிறுவியது. இந்நிலையில், இந்தியாவில் வைஃபை சேவையை நிறுத்திக் கொள்ள கூகுள் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து blog-ல் எழுதியுள்ள கூகுளின் துணைத் தலைவர் சீசர் குப்தா, உலகிலேயே அதிகம் இணையம் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாகவும், விலை குறைந்த இணைய சேவை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் மொபைல் போன் மூலம் எளிதில் இணையத்தைப் பயன்படுத்துவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வைஃபை சேவைகளை நிறுத்த கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. கடந்த மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல், ரயில்நிலையங்களில் மட்டுமில்லாது, ரயில்நிலையங்கள் அருகில் இருப்பவர்களும் இலவச வைஃபை வசதியை பயன்படுத்தும் திட்டத்தை யோசனை செய்து தருவதாக தெரிவித்த நிலையில், கூகுள் நிறுவனம் இப்படி ஒரு முடிவை எடுத்து அதிர்ச்சியளித்துள்ளது. டாட்டா ட்ரஸ்ட் குரூப், பவர் கிரிட் கார்ப் நிறுவனங்கள் இலவச வைஃபை சேவையை தொடரும் என்று கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘கூகுள் மேப் பொய் சொல்லாது’.. சந்துபொந்தெல்லாம் புகுந்துபோன வேன் டிரைவர்.. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி..!
- 'டாப் 100' வலைதளங்களின் பெயர்கள் 'வெளியீடு'... முதல் இடத்தை தலைவன் 'கூகுள்' பிடித்துள்ளார்.. அடுத்த 9 'வலைதளங்கள்' குறித்த 'தகவல்கள்' உள்ளே...
- 'இப்ப 'கூகுள்'லயே ரீசார்ஜ் செய்யலாம்!... நீங்க முயற்சி பண்ணி பாத்தீங்களா?... கூகுளின் புதிய அப்டேட்!'...
- யப்பா! என்ன டேஸ்ட்டு... உலகளவில் அதிகம் 'தேடப்பட்ட' உணவு இதுதான்... முதலிடத்தை பிடித்த 'இந்திய' நகரம்!
- ‘வீட்ல இருந்தே வேலை செய்யுங்க’... ‘கொரோனா வைரஸ் தாக்கத்தால்’... ‘சீனாவில்’... ‘தற்காலிக மூடப்பட்ட அமெரிக்க நிறுவனம்’!
- ‘ரயிலைப் பிடிக்க’.. ‘அவசரத்தில் பயணி செய்த காரியம்’... ‘சென்னை எழும்பூரில் பதறிய மக்கள்’... 'துரிதமாக செயல்பட்ட போலீஸ்'!
- 'பாலில் 'டாய்லெட்'க்கு பயன்படுத்தப்படும் தண்ணீரா?... 'எழும்பூரில் நடந்தது என்ன'?... அதிர்ச்சி வீடியோ!
- ‘போர் அடிக்காமா இருக்க’... இனி ரயில் பயணத்திலும் சினிமா, இசை நிகழ்ச்சிகள் பார்க்கலாம்... புறநகர் ரயில்கள் உள்பட... ரயில்வே நிர்வாகத்தின் புதிய வசதி!
- “பொங்கல் நெருங்கிடுச்சே?”.. “சென்னையில் இருந்து 4,950 சிறப்பு பேருந்துகள்!”.. “சிறப்பு ரயில்கள் பற்றிய விபரங்கள் உள்ளே!”
- 'வருவாய் குறைவு'...'ரயில்வே கட்டணம் எவ்வளவு உயர போகுது'?...அதிர்ச்சியில் மக்கள்!