‘திருமணத்துக்கு மறுத்த இளம்பெண்’.. ‘தீ வைத்து கொல்ல முயன்ற இளைஞன்’.. பரபரப்பு சம்பவம்!
முகப்பு > செய்திகள் > India newsகேரளாவில் திருமணத்துக்கு மறுத்த இளம்பெண்ணை பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயன்ற இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கேரளா மாநிலம் கும்நாட் பகுதியில் 18 வயதான அஜின் ரேஜி மேத்யூ என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவல்லா என்னும் பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அப்பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள சொல்லி வற்புறுத்தியதாகவும், அதற்கு அப்பெண் மறுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து இன்று அப்பெண் கல்லூரிக்கு சென்றுகொண்டிருக்கும் போது வழிமறித்து அஜின் மீண்டும் தன்னை திருமணம் செய்துகொள்ளச் சொல்லி வற்புறுத்தியுள்ளார். இதனை அப்பெண் மறுக்கவே, ஆத்திரமடைந்த அஜின் தான் கொண்டுவந்த பெட்ரோலை அப்பெண்ணின் மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.
இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனே பெண்ணின் மீது எரிந்த தீயை அணைத்து மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும் தப்பியோட முயன்ற அஜினை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதனை அடுத்து அஜின் மேத்யூவை கைது செய்த காவல்துறையினர், அவரின் மீது 302 -பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் ஆபத்தான நிலையில் உள்ள அப்பெண் தீவிர சிகிச்சையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
OTHER NEWS SHOTS
தொடர்புடைய செய்திகள்
- ஆன்லைனில் வீடியோ பார்த்து குழந்தை பெற்ற திருமணமாகாத பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!
- கணவரின் சந்தேக டார்ச்சரை பொறுக்க முடியாத போலீஸ் மனைவி துப்பாக்கியால் சுட்ட சம்பவம்!
- வாட்ஸ்-ஆப்பின் கோவத்துக்கு ஆளாகாதீங்க.. அப்புறம் உங்க கணக்கு அம்பேல்தான்.. இத படிங்க!
- அஞ்சு மரக்கன்றுகளை நட்டா, அரஸ்ட் வாரண்ட் கேன்சல்.. வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம்!
- சைகோ போல் குரூரமாக நாயைத் தாக்கிய நபர்.. சிசிடிவியில் வெளியான பரபரப்பு சம்பவம்!
- ‘இரவு 3 மணி.. மகனின் மீது அமர்ந்து கத்தியால் குத்திய கணவர்’.. கதறிய மனைவி!
- ‘புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளான விமானம்’.. 4 இந்தியர்கள் உட்பட 157 பேர் உயிரிழந்த பரிதாபம்!
- ‘புறப்பட்ட 6 நிமிடங்களில் விபத்துக்குள்ளான விமானம்’..157 பயணிகளின் நிலை?
- தேர்தலில் போட்டியிட்டு மேயரான ‘ஆடு’.. வியக்க வைக்கும் சம்பவம்!
- லைசன்ஸ் இல்லாத துப்பாக்கியை இடுப்பில் சொருகியபடி வாக்கிங் சென்றவருக்கு நடந்த பரிதாபம்!