‘மோடியின் தொலைநோக்கு பார்வையால் ஈர்க்கப்பட்டேன்’.. பாஜக -வில் இணைந்த பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்!

முகப்பு > செய்திகள் > India news
By |

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் பாஜாக -வில் இணைந்துள்ளார்.

இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேனான கவுதம் காம்பீர், தொடக்க வீரராக களமிறங்கி பல சாதனைகளைப் படைத்துள்ளார். கடந்த 2011 -ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கடைசி போட்டியில் காம்பீரின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய இவர், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக கேப்டனாக செயல்பட்டு கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.

இதனை அடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். சமீபத்தில் கவுதம் காம்பீருக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கி மத்திய அரசு கவுரவித்தது. புல்வாமா தாக்குதலை அடுத்து அரசியல் குறித்த தனது கருத்துக்களை அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுவந்தார்.

இந்நிலையில் இன்று(22.03.2019) டெல்லியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் நெடுஞ்சாலை, போக்குவரத்து மற்றும் கப்பல்துறை அமைச்சர் நிதின் கட்காரி ஆகியோரின் முன்னிலையில் கவுதம் காம்பீர் பாஜக -வில் இணைந்தார். மேலும், மோடியின் தொலைநோக்கு பார்வையால் ஈர்க்கப்பட்டதாகவும், கட்சியில் இணைந்து பணியாற்றுவதை எண்ணி பெருமைப்படுவதாகவும் காம்பீர் கூறியுள்ளார்.

வரும் மக்களவைத் தேர்தலில் டெல்லியில் காம்பீர் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்குமுன் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஜடேஜாவின் மனைவி ரிவபா பாஜக -வில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

LOKSABHAELECTIONS2019, GAMBHIRJOINSBJP, BJP

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்