நம்ம விஜய் பட ஸ்டைலில் நடவடிக்கை எடுக்க தயாராகும் தேர்தல் ஆணையம்! அட அப்படி என்ன நடவடிக்கை?

முகப்பு > செய்திகள் > India news
By |

 

விஜய்யின் சர்க்கார் படத்தில் வருவதுபோல தேர்தல் ஆணையம் கள்ள ஓட்டு போடுவதைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், ஒருவருடைய வாக்கினை யாராவது கள்ள ஓட்டாக முன்னரே செலுத்தி இருந்தாலும் வாக்காளர் தனது வாக்கினை ஃபார்ம் 17 பி பேலட் பேப்பரில் பதிவு செய்யலாம். மேலும், அந்த வாக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். பிறகு இயந்திரத்தில் பதிவாகிய போலி வாக்கு அழிக்கப்படும். போலி வாக்கு செலுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

வாக்களிக்க எலெக்ஷன் பூத்திற்கு வரும் ஒரு நபர் போலி வாக்காளர் என கட்சி ஏஜண்ட் ஒருவருக்கு சந்தேகம் ஏற்பட்டால் அதிகாரியிடம் 2 ரூபாய் கட்டி அவரது ஆவணங்களை சரிபார்க்கச் சொல்லலாம். அவர் உண்மையான வாக்காளராக இருந்தால், வாக்களிக்க அனுமதி வழங்கப்படும். ஏஜண்ட் கொடுத்த 2 ரூபாய் பணம் திருப்பி அளிக்கப் படமாட்டாது.

ஒருவேளை அவர் போலி வாக்காளராக இருந்தால், உடனடியாக காவலர்களுக்கு தகவல் வழங்கப்பட்டு போலி வாக்காளர் கைது செய்யப்படுவார். ஏஜெண்ட் கொடுத்த 2 ரூபாய் அவருக்கு திருப்பி வழங்கப்படும். இதுபோல எத்தனை முறை வேண்டுமானாலும் ஏஜண்ட்கள் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்