‘ஐசியு-வில் இருந்த பெண்.. கூட்டு பலாத்காரம் செய்த மருத்துவர்கள், ஊழியர்கள்.. பெண் உட்பட 5 பேர் கைது!
முகப்பு > செய்திகள் > India newsஉத்தரப் பிரதேசத்தில் தனியார் மருத்துவமனை ஒன்றில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) நிகழ்ந்துள்ள கூட்டு பாலியல் பலாத்கார சம்பவம் இந்தியாவையே அதிரவைத்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அவசர சிகிச்சைப் பிரிவின் கீழ், ஐசியு- வார்டில் மூச்சுத் திணறல் காரணமாக பெண் ஒருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மூச்சுத் திணறல் காரனமாக அங்கேயே தங்கி, சிகிச்சை எடுக்க வேண்டி, மருத்துவர்கள் அறிவுறுத்தியதன் பேரில் முழுமையான படுக்கை வசதியுடன் கூடிய அறையில் அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
30 வயது மதிக்கத்தக்க இந்த பெண்ணின், கல்லீரலிலில் உண்டான சிக்கலும், சுவாசக் கோளாறும் காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த மார்ச் 21-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவரது கணவர், உறவினர்கள் வெளியில் சென்றுவிட்ட நிலையில், அந்த தனியார் மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவர்கள் என 3 பேர், அந்த பெண்ணுக்கு மயக்க ஊசி போட்டு, பின்னர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதற்கு ஒரு பெண்ணும், இன்னொருவரும் உடந்தையாக இருந்துள்ளது இன்னும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவரும் ஒரு பெண்ணை 3 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததும், அதற்கு பெண் ஊழியரே உடந்தையாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு, இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்ட 5 பேரும், உரிய சட்டத்தின் கீழ், உத்தர பிரதேச காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணையில் இந்த மருத்துவ ஊழியர்கள், பலாத்காரத்திற்கான திட்டத்தை வகுப்பதற்கு முன்னர் சிசிடிவி கேமராவின் செயல்பாடுகளை நிறுத்தியுள்ளதும் தெரியவந்தது. போலீஸார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
OTHER NEWS SHOTS
தொடர்புடைய செய்திகள்
- ‘சாலையைக் கடக்க முயற்சித்த பெண்’.. வந்த வேகத்தில் அடித்து தூக்கி வீசப்பட்டு விபத்து!
- என்னது பிறந்த குழந்தையின் வயிற்றுக்குள் இன்னொரு குழந்தையா?.. எப்படி சாத்தியம்?.. மருத்துவர்கள் சொல்லும் விளக்கம்!
- என் குழந்தை எங்க மேடம்?.. குப்பத்தொட்டியில வீசிட்டேன்.. அலட்சியத்தால் பச்சிளம் குழந்தையை நாய் குதறிய அவலம்!
- ‘ஆபத்தான குதிரைப் பந்தயம்’.. ‘9 வயது சிறுவனின் சாகசம்’.. மனம் பதற வைக்கும் வீடியோ!
- ஹோலி பண்டிகையில் விபரீதம்: முதலுதவி செய்து காப்பாற்றிய புகைப்பட பத்திரிகையாளர்!
- பிரசவத்தின்போது, இடுக்கி வைத்து இழுத்ததால், குழந்தையின் தலை துண்டான சோகம்!
- ‘12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து’.. துடிதுடிக்க கொலை செய்த 3 அண்ணன்கள்!
- ‘உயர்நீதிமன்றத்தில் வைத்து மனைவிக்கு கத்திகுத்து’.. உறைந்த நீதிபதி.. பரபரப்பு சம்பவம்!
- உ.பியில் கொடூரம்: சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த கும்பல்!
- 3 மணிநேர சித்ரவதை.. கை, கால் நரம்பை அறுத்து வீடியோ எடுத்து ரசித்த கும்பல்.. பதற வைக்கும் சம்பவம்!