'இறப்பதற்கு முன் சுஷாந்திற்கு போன் செய்த திஷா'... 'அன்று நடந்த பார்ட்டியில்'... 'புதிதாக வெளிவந்துள்ள அதிர்ச்சி தகவல்கள்!'...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் உயிரிழந்த விவகாரத்தில் அவருடைய முன்னாள் மேனேஜர் திஷா குறித்து புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் அவருடைய வீட்டில் தற்கொலை செய்துகொண்டதாக முதலில் கூறப்பட்டுவந்த நிலையில், சமீபமாக அவர் மரணம் குறித்து சந்தேகம் எழும்பும்படி நாள்தோறும் பல புதிய தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. சுஷாந்த் சிங் இறப்பதற்கு முன்னதாக ஜூன் 8ஆம் தேதி அவருடைய முன்னாள் மேனேஜர் திஷா என்பவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது சுஷாந்த் மரணத்திற்கு நீதி கேட்டு வரும் ஆக்டிவிஸ்ட் பிரசாந்த் என்பவர் திஷா, சுஷாந்த் குறித்து புதிய தகவல் ஒன்றை ரிபப்ளிக் தொலைக்காட்சியிடம் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள பிரசாந்த், "திஷா தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் ஜூன் 8ஆம் தேதி அவர் பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார். அதில் பல ஸ்டார்கள், பிரபலங்கள் கலந்துகொண்ட நிலையில், திஷா அங்கு தன்னை தவறாக நடத்தியதாக சுஷாந்திற்கு போன் செய்து கூறிள்ளார். அவர் அதற்கு திஷாவை உடனடியாக அங்கிருந்து கிளம்பும்படியும், தான் அதுகுறித்து பார்த்துக்கொள்வதாகவும் கூறியுள்ளார். அதன் பின்னர் சிறிது நேரம் கழித்தே திஷா தற்கொலை செய்துகொண்டதாக சுஷாந்திற்கு தகவல் கிடைத்துள்ளது. அவர் அதைக் கேட்டு நம்ப முடியாமல் இருந்துள்ளார்.

அதற்கு அடுத்த நாளே சுஷாந்திற்கும் ரியாவிற்கும் சண்டை ஏற்பட்டு அவர்கள் பிரிந்துள்ளனர். அதன்பிறகே ஜூன் 14ஆம் தேதி சுஷாந்த் உயிரிழந்துள்ளார். திஷா உயிரிழந்த அன்று நடந்த பார்ட்டி குறித்த தகவல்களை அவருடைய நண்பர் ஒருவரே எனக்கு போன் செய்து கூறினார்" எனக் கூறியுள்ளார். இதற்கிடையே திஷா தற்கொலை வழக்கு தொடர்பாக மும்பை போலீசாரிடம் இருந்த தகவல்கள் தவறுதலாக அழிக்கப்பட்டு விட்டதாகவும் செய்திகள் வெளிவந்துகொண்டிருப்பது  இங்கு குறிப்பிட்டத்தக்கது.  

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்