65 வயது முதியவரின் ஆன்லைன் டேட்டிங் ஆசை... ரூ. 46 லட்சம் அபேஸ்!

முகப்பு > செய்திகள் > India news
By |

ஆன்லைன் டேட்டிங் ஆசையில் ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவர், ரூ. 46 லட்சத்தை இழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை குரார் பகுதியில் ஓய்வுபெற்ற தனியார் நிறுவன அதிகாரி ஒருவர் வசித்து வருகிறார். 65 வயதாகும் இவர், வழக்கம் போல இணையதளத்தை பார்த்துக்கொண்டு இருந்தார். அப்போது, அதில் சில ஆபாச விளம்பரங்கள் வந்துள்ளன. அதைப் பார்த்து சபலம் அடைந்த அதிகாரி, அந்த இணையதள பக்கத்துக்குள் சென்று பார்த்தார்.

அதில் பெயர், முகவரி, அலைபேசி உள்ளிட்ட விவரங்களை கொடுத்து உறுப்பினராக இணைந்தால் இளம் பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என கூறப்பட்டு இருந்ததாக தெரிகிறது. உடனே அதிகாரி தனது விவரங்களை அதில் பதிவு செய்தார். அதனைத்தொடர்ந்து பெண் ஒருவர் அந்த அதிகாரிக்கு போன் செய்ததாக கூறப்படுகிறது.

அப்போது, 'அந்தப் பெண் ரூ.10 லட்சம் செலுத்தினால், ஒரு ஆண்டு முழுவதும் 3 அழகிகளுடன் உல்லாசம் அனுபவிக்கலாம் என ஆசைவார்த்தை கூறினார். மேலும் பல்வேறு சேவை கட்டணங்களும் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.' இதை முழுவதுமாக நம்பிய அந்த அதிகாரி,  பெண் கூறிய வங்கிக் கணக்குக்கு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணத்தை அனுப்பி வைத்தார்.

அதன் பின்னர், அந்தப் பெண், வேறு ஒரு பெண்ணின் செல்போன் எண்ணை ஓய்வுபெற்ற அதிகாரிக்கு கொடுத்தார். அந்தப் பெண்ணும் பல்வேறு ஆசை வார்த்தைகளைக் கூறி பணத்தை ஆன்லைன் மூலமாகவே வாங்கிக்கொண்டு தலைமறைவாகினார்.

இதன் மூலம் அந்த அதிகாரி தான் சேமித்து வைத்திருந்த ரூ.46 லட்சத்தை அந்தப் பெண்களிடம் இழந்தார். மேலும் அந்தப் பெண்கள் கூறியது போல உல்லாசத்துக்கும் அழகிகளை அனுப்பவில்லை. இதன் மூலமாக தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த அதிகாரி தனது குடும்பத்திடம் இதைக் கூறியுள்ளார்.

இதையடுத்து மும்பையில் உள்ள குரார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி செய்த பெண்களை தேடி வருகின்றனர். 

MUMBAI, DATING, OLDMAN, FRAUD, WEBSITE, ONLINE

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்