'இந்தியாவில் தயாராகும் 3 தடுப்பு மருந்துகள்'... 'தற்போதைய நிலை என்ன?'... 'ஐசிஎம்ஆர் இயக்குநர் தகவல்'...
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா வைரஸுக்கு எதிரான 2 தடுப்பு மருந்துகள் முதல்கட்ட பரிசோதனையை வெற்றிகரமாக முடித்து, 2ஆம் கட்ட பரிசோதனையை தொடங்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா வைரஸுக்கு எதிரான 2 தடுப்பு மருந்துகள் மனிதர்கள் மீதான முதல்கட்ட கிளிக்கல் பரிசோதனையை வெற்றிகரமாக முடித்து, 2ஆம் கட்ட கிளிக்கல் பரிசோதனையை தொடங்கிவிட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) இயக்குநர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "உலகளவில் 141 நிறுவனங்கள் கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் பணியில் இறங்கியுள்ளதில் 26 நிறுவனங்கள் தடுப்பு மருந்தின் முக்கியக் கட்டத்தில் உள்ளன.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் 3 நிறுவனங்கள் இறங்கியுள்ளன. அதில் 2 உள்நாட்டு நிறுவனங்களான பாரத் பயோடெக் நிறுவனம், ஜைடெஸ் கெடிலா ஆகியவை கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் முதல்கட்ட கிளிக்கல் பரிசோதனையை 11 இடங்களில் முடித்துவிட்டு, 2ஆம் கட்ட கிளிக்கல் பரிசோதனையை தொடங்கியுள்ளன.
மேலும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து கொரோனா தடுப்பு மருந்தைத் தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ள இந்தியாவின் செரம் மருந்து நிறுவனம் அந்த தடுப்பு மருந்தின் 2ஆம் மற்றும் 3ஆம் கட்ட கிளிக்கல் பரிசோதனையை மனிதர்கள் மீது செலுத்தி பரிசோதிக்க அனுமதி பெற்றுள்ளது. அந்தப் பரிசோதனை 17 இடங்களில் ஒரு வாரத்தில் நடக்க உள்ளது. அதனால் கொரோனா தடுப்பு மருந்து கிடைக்கும்வரை நாம் சமூக விலகலைக் கடைபிடித்தல், முக்ககவசம் அணிதல், கைகளை கழுவுதல் போன்றவற்றை முறையாக பின்பற்ற வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் தண்ணீர்!'... 'வெளியாகியுள்ள புதிய ஆய்வு முடிவு'...
- விருதுநகரில் மளமளவென அதிகரிக்கும் கொரோனா தொற்று!.. தேனியில் 6 ஆயிரத்தை கடந்தது பாதிப்பு எண்ணிக்கை!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்... சளைக்காமல் கோரத்தாண்டவம் ஆடும் வைரஸ்!.. முழு விவரம் உள்ளே
- 'கட்டுப்பாட்டு பகுதிகளே இல்லாத 9 மண்டலங்கள்'... '3 நாளில் பாதியாக குறைந்த எண்ணிக்கை'... சென்னையில் என்ன நிலவரம்?...
- 'இதுவரை இருந்த மிகப்பெரும் சவால்'... 'வெளியாகியுள்ள வாக்சின் செயல்பாட்டுக்கு உதவும் நல்ல செய்தி'... 'ஆய்வில் நம்பிக்கையூட்டும் தகவல்!'...
- 'அமெரிக்க வேலைகளைக் குறிவைக்கும்'... 'இந்திய ஐடி துறையினருக்கு அடுத்த பேரிடி'... 'அதிபர் ட்ரம்ப்பின் புதிய அதிரடி அறிவிப்பு'...
- 'கொரோனாவுக்கு மருந்தே கண்டுபிடிக்காம கூட போகலாம்...' - ஷாக் கொடுத்த உலக சுகாதார நிறுவனத் தலைவர்...!
- இந்தியாவுல கொரோனா தடுப்பூசி 'மொதல்ல' யாருக்கு கிடைக்கும்?
- 'விமான சேவையை விரும்பும் மக்கள்'... '2 மாதங்களுக்குப் பின் எண்ணிக்கை அதிகரிப்பு'... 'இயல்புக்கு திரும்பும் சென்னை விமான நிலையம்'...
- “சுஷாந்த் கேஸை நான் விசாரிக்கிறேன்!”.. ‘அசுர வேகத்தில் வந்த ஐபிஎஸ் அதிகாரி!’.. மாநகராட்சி செய்த காரியம்!