'அப்படி என்ன கேட்டார் அவர்'?...'ராகுல் காந்தி'க்கு குவியும் பாராட்டுகள்...வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > India newsடெல்லியில் தனது காரில் சென்று கொண்டிருந்த போது,சாலையோரத்தில் அடிபட்டு நின்று கொண்டிருந்த பத்திரிக்கையாளருக்கு ராகுல் காந்தி உதவி செய்த சம்பவம் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
நேற்று மாலை ராகுல் காந்தி மத்திய டெல்லி, ஹுமாயூன் சாலையில் தனது காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த சாலையில் பத்திரிகையாளர் ஒருவர் அடிப்பட்ட நிலையில் நின்றுகொண்டிருந்தார்.அதனை கவனித்த ராகுல் காந்தி உடனே தனது வாகனத்தை நிறுத்தி,அந்த பத்திரிகையாளரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக தனது காரில் ஏற்றி கொண்டார்.அப்போது அவரது தலையில் காயம் இருந்ததால் ரத்தம் வழிந்து கொண்டே இருந்தது.ராகுல் காந்தி தனது கைக்குட்டையால் அடிபட்டவரின் ரத்தத்தைத் துடைத்தார்.
அப்போது பத்திரிகையாளரின் உடன் வந்தவர் அதனை வீடியோ எடுத்து கொண்டிருந்தார்.அப்போது அடிப்பட்டவர் ``சார் ப்ளீஸ் இன்னொரு வாட்டி உங்க கைகுட்டையால என் ரத்தத்தை துடைத்துவிடுங்க'' என கூற ராகுல் காந்தியும் சிரித்து கொண்டே துடைத்து விட்டார்.
பின்பு காயமடைந்த பத்திரிகையாளரை எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு ராகுல் காந்தி புறப்பட்டு சென்றார்.ராகுல் காந்தி மிகவும் மனிதாபிமானம் உள்ளவர் என்பதற்கு இதுவே சான்று என நெட்டிசன்கள் புகழ்ந்து வருகிறார்கள்.இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.
OTHER NEWS SHOTS
தொடர்புடைய செய்திகள்
- நான் படிப்படியாக உயர்ந்து முதல்வர் பதவிக்கு வந்தேன்! ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த எடப்பாடி பழனிசாமி!
- தினகரனுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் சுப்ரமணிய சுவாமி! குழப்பத்தில் பாஜக நிர்வாகிகள்!
- ட்விட்டரில் மோடிக்கு வாழ்த்து கூறி கேலி செய்த ராகுல் காந்தி!
- காடுவெட்டி குருவை நினைத்து மேடையில் கண்கலங்கிய ராமதாஸ்!
- ‘மய்யத்துடன் கூட்டணி இல்லை.. தென் சென்னையில் போட்டி’: பவர் ஸ்டாரின் பிரத்யேக பேட்டி!
- தேர்தல் யுத்தம்: இருபெரும் கட்சிகளின் வியூகம்.. தென் சென்னையில் யாருக்கு வெற்றி?
- 40 தொகுதிக்கு 810 பேர் வேட்புமனு தாக்கல்! இன்றுடன் நிறைவடைந்தது வேட்புமனு தாக்கல்!
- அட இங்கையும் பிரச்சாரமா? தனி ஸ்டைலில் பிரச்சாரம் செய்யும் பிரியங்கா காந்தி!
- மக்களவைத் தேர்தலில் நிற்கும் ‘ரஜினி - கமல் - விஜயகாந்த் படங்களில் நடித்த’ நாயகிகள்!
- காங்கிரஸ் ஜெயித்தால்! பாகிஸ்தானுக்கு தீபாவளி பாஜக மூத்த தலைவர் சர்ச்சைப் பேச்சு!