தேர்தலில் போட்டியிட சீட் மறுப்பு.. கதறி அழுத எம்.பி -யால் பரபரப்பு!

முகப்பு > செய்திகள் > India news
By |

வரயிருக்கும் மக்களவை தேர்ததில் தனக்கு சீட் கிடைக்காததால் பாஜக எம்.பி ஒருவர் கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற இருக்கிறது. வரும் ஏப்ரல் 11 -ஆம் தேதி தொடங்கி, மே 19-ஆம் தேதி வரை தேர்தல் நடைபெற இருக்கிறது. மக்களவைத் தேர்ததில் போட்டியிடும் தங்களது வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்து, கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

சமீபத்தில் பாஜக தலைமை, தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இதில் உத்திர பிரதேச மாநிலத்தில் எம்.பி -யாக உள்ள  பிரியங்கா ராவத்துக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட சீட் தரவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் தனக்கு சீட் கிடைக்காததால் பாஜக எம்.பி பிரியங்கா ராவத் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

இதனால் அங்கிருந்த அவரின் ஆதரவாளர்கள் சீட் மறுக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு சற்று பரபரப்பு நிலவியது.

LOKSABHAELECTIONS2019, BJP, MP, CRIED

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்