ஒவ்வொன்னுக்கும் ஜெய்ஹிந்த்-னு சொல்லனுமா? விமானத்தின் அறிவிப்பால் கடுப்பான நெட்டிசன்கள்!

முகப்பு > செய்திகள் > India news
By |

ஏர் இந்தியா நிறுவனம் விமான சேவைகளில் தனது இன்றியமையாத பங்களிப்பை தவறாமல் வழங்கி வருகிறது.

இந்த நிலையில், புதிதாக ஒரு அறிவிப்பினை வெளியிட்டு பயணிகள் மற்றும் விமான ஊழியர்களிடம் பெரும் சலசலப்பை உண்டுபண்ணியுள்ளது.  அதன்படி ஏர் இந்தியா விமான ஊழியர்களும் பணிப்பெண்களும் விமான பயணிகளுக்குச் சொல்லும் ஒவ்வொரு அறிவிப்பின் முடிவிலும் ஜெய் ஹிந்த் எனச் சொல்ல வேண்டும் என்பதுதான் புதிய விதி. வழக்கத்தைப் போலவே ஏர் இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கும் ஆதரவு நிலைப்பாடு மற்றும் இது தேவையற்றது என்பது போன்ற பலதரப்பட்ட கருத்துக்கள் எழத் தொடங்கியுள்ளன.

இது வரவேற்கத்தக்க ஒன்றுதான். ஆனால் இதேபோல் மற்ற விமான நிறுவனங்களும் செய்ய வேண்டும் என்று சிலர் கருத்து கூறியுள்ளனர். சிலரோ, இது வழக்கமாக ஏர் இந்தியாவில் இருக்கிறது. ஆனால் இப்போது ஒவ்வொரு அறிவிப்பு முடிந்த பிறகும், அதாவது Find nearest exit, jai hind. Look for oxygen masks, jai hind. Find floatation device beneath seat, jai hind என்று அவசர காலத்தில் சொல்லிக்கொண்டிருப்பது என்ன மாதிரியான தேசப்பற்று என்றும், சிலர் இதனை நாட்டுப்பற்றை திணிப்பதாகவும் கருத்து கூறியுள்ளனர். 

பலரின் ஒருமித்த கருத்தாக, திரையரங்குகளில் தேசிய கீதம் ஒலிக்கப்பட வேண்டும் என்கிற அறிவிப்பையும், தற்போது கூறப்பட்டுள்ள இந்த அறிவிப்பையும் ஒப்பிட்டபடி உள்ளது.  முன்னதாக திரையரங்குகளில் தேசிய கீதம் ஒலிக்க வேண்டும் என்று அறிவிப்புகள் வெளியானபோது முதலில் பூடகமாக பலர் எதிர்த்தனர். ஆனால் சில நாட்களில், தேசிய கீதம் போன்ற நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் முனைப்புகளை திரையரங்குகளில் அமல்படுத்துவது என்பது அவசியமா என்று  விவாதங்களும் கருத்துக்களும் எழுந்தன.

ஆனால் இறுதியாக குறிப்பிட்ட சில திரையரங்குகளில் மட்டுமே இந்த நடைமுறை உள்ளது. இதேபோல் தற்போது ஏர் இந்தியாவின் விமான ஊழியர்களுக்கும் பணிப்பெண்களுக்கும் கடைபிடிக்கச் சொல்லி, அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய நடைமுறையானது தேசப்பற்றை ஊக்குவிக்கும் நோக்கில் அமல்படுத்தப் படுத்தப்படுவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

AIRINDIA, FLIGHT, JAIHIND

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்