பப்ஜிக்கு அடிமையான மாணவர்.. கல்லூரித்தேர்வில் செய்த பரபரப்பு காரியம்!

முகப்பு > செய்திகள் > India news
By |

பப்ஜி கேமுக்கு அடிமையாகும் மாணவர்கள் பெருகி வருவதால் பெற்றோர்கள் பெரும் பதற்றமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். ஆனால் கல்லூரி தேர்வு ஒன்றில் மாணவர் ஒருவர் செய்துள்ள காரியம் அவர் பப்ஜி கேமுக்கு எந்த அளவுக்கு அடிமையாகியுள்ளார் என்பதை நிரூபித்துள்ளதோடு, மேற்கொண்டு பெற்றோர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கேமினால் குழந்தைகள் மன ரீதியாக பாதிக்கப்படுவதோடு, அவர்கள் மனதளவில் ஆபத்தானவர்களாக மாறுவதாக உளவியல் ஆலோசகர்கள் கூறியதை அடுத்து வட மாநிலங்களில் குறிப்பாக குஜராத், ராஜஸ்தான் பகுதிகளில்ஈந்த விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடாக்கில் உள்ள கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் எழுதிய தேர்வொன்றில், அவர் பாடத்தை பற்றி எதுவும் எழுதாமல், பப்ஜி கேமை பற்றி எழுதியதால், கல்லூரி நிர்வாகத்தினரும், அந்த மாணவரின் பெற்றோரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  எந்த அளவுக்கு அந்த விளையாட்டு அந்த மாணவரை பாதித்திருந்தால், அவர் தனது கல்லூரி தேர்வில் போய், இத்தகைய விளையாட்டை பற்றி எழுதுவார் என்று அனைவரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதுபற்றி பேசிய அந்த மாணவர், தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்புதான், தான் பப்ஜி விளையாடத் தொடங்கியதாகவும், அதற்காக விடுப்பு எடுக்கக் கூட தன் மனம் தயங்குவதில்லை என்றும், தேர்வில் பப்ஜி பற்றி எழுதியதால் தனக்கே தன் மீது கோபம் உண்டாகியதாகவும், இப்போதுதான் அந்த விளையாட்டு எந்த அளவுக்கு அபாயகரமான விளையாட்டு என்பது புரிவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுபற்றி பேசிய, அந்த கல்லூரி பேராசிரியர்கள், ‘பொதுவாகவே தேர்வில் மாணவர்கள் திரைப்படங்களை பற்றி எழுதுவதுண்டு. ஆனால் இந்த மாணவர் இன்னும் ஆபத்தான் ஸ்டேஜுக்கு தள்ளப்பட்டதால் பப்ஜி பற்றி எழுதியுள்ளார். இதனால் அவரின் பெற்றோருக்கு தகவல் கொடுத்து, மாணவரை உடனடியாக நல்ல உளவியல் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல அறிவுறுத்தியிருக்கிறோம்’ என்று கூறியுள்ளார்.

COLLEGESTUDENT, EXAM, PUBG, GAME, ADDICTION

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்