‘போர் விமானம் ஓட்ட ஆசையாக இருக்கு’.. பணிக்கு மீண்டும் திரும்புவாரா அபிநந்தன்?
முகப்பு > செய்திகள் > India newsஇந்திய விமானப்படை விமானி அபிநந்தன் பணிக்கு திரும்புவது குறித்து விமானப்படைத் தளபதி பி.எஸ். தனோவா பேட்டியளித்துள்ளார்.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமனாப்படை தீவிரவாதிகளின் முகாம் மீது தாக்குதல் நடத்தியது. அப்போது தமிழகத்தைச் சேர்ந்த விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக்கொண்டார். உலக நாடுகளின் அழுத்தத்தின் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை இந்திய விமானி அபிநந்தனை பாகிஸ்தான் அரசு விடுவித்தது. இதனை அடுத்து விமானி அபிநந்தனுக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், கோவையை அடுத்துள்ள சூலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விமானப்படைத் தளபதி பி.எஸ். தனோவா, ‘அபிநந்தன் போர் விமானம் ஓட்டுவதும், ஓட்ட முடியாமல் போவது அவரின் உடல் தகுதியைப் பொறுத்தது. அவருக்கு உடல்ரீதியான தகுதிகள் ஆராயப்பட்டு வருகின்றன. உடல் தகுதியை எட்டினால் மட்டுமே மீண்டும் விமானத்தை இயக்க முடியும்’ என கூறியுள்ளார்.
மேலும், பேசிய அவர்,‘இந்திய விமானங்கள் பாலகோட்டில் இலக்கை துல்லியமாகத் தாக்கின. ஆனால், எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பதைத் துல்லியமாகக் கூற முடியாது’ என விமானப்படைத் தளபதி பி.எஸ். தனோவா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அபிநந்தன் தனக்கு சிகிக்சை அளிக்கும் மருத்துவர்களிடம், விரைவில் மீண்டும் போர் விமானம் ஓட்ட ஆசைப்படுவதாக தெரிவித்தார் எனக் கூறப்படுகிறது.
OTHER NEWS SHOTS
தொடர்புடைய செய்திகள்
- 300 தீவிரவாதிகள் செத்துட்டாங்களா?...நாங்க எப்போ சொன்னோம்?...என்ன இவரே இப்படி சொல்லிட்டாரு!
- விமானத்திலிருந்து 'அபிநந்தன்' அனுப்பிய கடைசி செய்தி என்ன?...வெளியான புதிய தகவல்!
- 'நீங்க இப்படி ட்வீட் போடுறீங்க'...'உங்க கணவர் என்ன போட்டார் தெரியுமா'?...சாடிய நெட்டிசன்கள்!
- 'அபிநந்தனுடன் வந்த பெண் யாரு'?...வழக்கம்போல் வதந்தியை கிளப்பிவிட்ட...'போலி நெட்டிசன்கள்'!
- 'கணவருக்கு இறுதி மரியாதை'...'விமானி உடையில் மனைவி'...வெள்ளத்தின் போது மக்களை காப்பாற்றியவர்!
- 'அபிநந்தனை' அழைத்துவர 'இந்தியா வைத்த கோரிக்கை'...'நிராகரித்த பாகிஸ்தான்'...பரபரப்பு தகவல்கள்!
- 'இன்னும் சில மணி நேரம்'!...'பெண்கள்,குழந்தைகள் புடைசூழ வாகா எல்லை...வீர திருமகனே வருக!
- ஆமா!...இவர் எங்க நாட்டுல தான் இருக்கார்...பாகிஸ்தான் வெளியிட்டிருக்கும் பரபரப்பு அறிக்கை!
- ''வாகா'' உனக்காக காத்திருக்கிறது ''அபி''... கொண்டாட்டத்தில் மக்கள்...களைகட்டியிருக்கும் எல்லை பகுதி!
- 'அபிநந்தன் பற்றிய 11 வீடியோக்களை அகற்ற யுடியூபுக்கு உத்தரவு': மத்திய அரசு!