'விடுமுறை இருந்தும் ஸ்ரீநகர் செல்லும்...'விங் கமாண்டர் அபிநந்தன்'...நெகிழ்ச்சியான காரணம்!

முகப்பு > செய்திகள் > India news
By |

4 வார மருத்துவ விடுப்பில் உள்ள நிலையில், மீண்டும் ஸ்ரீநகர் திரும்பியுள்ளார் விங் கமாண்டர் அபிநந்தன்.

ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முகாம்கள் மீது இந்திய விமானைப்படை  தாக்குதல் நடத்தியது.இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக,இந்திய பகுதியில் பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியது.அப்போது இந்திய போர் விமானங்கள் குறுக்கிட்டு அவற்றை தடுத்து நிறுத்தின. இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் எப்-16 ரக போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

இந்தநிலையில், இந்திய விமானப்படையின் மிக்-21 ரக போர் விமானம் பாகிஸ்தான் விமானப்படையால் சுட்டு வீழ்த்தப்பட்டது.அப்போது அந்த விமானத்தில் இருந்த கமாண்டர் அபிநந்தன்  பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பினார்.ஆனால் பாகிஸ்தான் எல்லையில் அவர் தரையிறங்கியதால்,பாகிஸ்தான் ராணுவம் அவரை கைது செய்து, 2 நாள் காவலில் வைத்திருந்தது.அதன் பின்பு நல்லெண்ண அடிப்படையில் அவரை விடுவிப்பதாக பாகிஸ்தான் அறிவித்தது.இதனைத் தொடர்ந்து இந்தியா திரும்பிய அவர் பாதுகாப்பு அதிகாரிகளின் 12 நாட்கள் விசாரணைக்கு பின்னர் விடுமுறையில் அனுப்பப்பட்டார்.

இதனிடையே மருத்துவக் குழு அவரது உடல்தகுதியை ஆராய்ந்து அவர் மீண்டும் போர்விமானத்தை இயக்க அனுமதிப்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.தற்போது  4 வார மருத்துவ விடுப்பில் உள்ள நிலையில், அபிநந்தன் மீண்டும் ஸ்ரீநகர் திரும்பியுள்ளார்.தனது விடுமுறை முடியும் முன்பே ஸ்ரீநகரில் உள்ள தனது விமானப்படைத் தளத்துக்கு அவர் திரும்பிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மருத்துவ விடுப்பு நாட்களில், சென்னையில் உள்ள தனது குடும்பத்தினருடன் இருப்பதை விட,ஸ்ரீநகரில் உள்ள தனது படைபிரிவினருடன் இருப்பதையே விரும்புகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

PULWAMAATTACK, CRPFJAWANS, IAF, ABHINANDAN VARTHAMAN, WING COMMANDER, SRINAGAR

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்