முக்கிய ஆவணங்களை எப்படி காப்பாற்றினார் அபிநந்தன்?.. பிரமிக்க வைக்கும் பின்னணி!

முகப்பு > செய்திகள் > India news
By |

இந்திய விமானப்படைத் தாக்குதலில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.

இதனை அடுத்து நேற்று(27.02.2019) இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் போர் விமானத்தை இந்திய ராணுவம் விரட்டியடித்தது. அப்போது நடந்த பதில் தாக்குதலின்போது இந்திய விமானி அபிநந்தன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதால் பாகிஸ்தானிடம் சிக்கிக் கொண்டார்.

இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவத்திடம் பிடிபடுவதற்கு முன் ராணுவ ரகசியங்களை காப்பதற்காக ஆவணங்களை அபிநந்தன் அழிக்க முயன்றதாக தகவல் வெளியாகியது. சம்பவம் நடைபெற்ற இடத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது ரசாக் சவுத்ரி என்பவர் இருந்துள்ளார். இவர் பாகிஸ்தானின் தினசரி நாளிதழான ‘டான்’னுக்கு அளித்த பேட்டியில், சண்டையில் இரண்டு விமானங்கள் சுடப்பட்டன. அப்போது ஒரு விமானம் எல்லைக்கட்டுப்பாட்டுக்கோட்டை தாண்டி இந்திய எல்லைக்குள் விழுந்தது.

மற்றொரு விமானம் தீப்பிடித்து எரிந்து கொண்டே கீழே வந்தது. அப்போது அதில் இருந்து விமானி பாராசூட் மூலம் கீழே இறங்கினார். அப்போது அங்கிருந்த சில இளைஞர்களிடம் இது இந்தியாவா? இல்லை பாகிஸ்தானா? என அந்த விமானி கேட்டார். ஆனால் இளைஞர்கள் வேண்டுமென்றே இது இந்தியா என்றனர். இதனை உண்மை என நம்பிய அந்த விமானி இந்தியாவை ஆதரித்து கோஷங்களை எழுப்பினார். மேலும் முதுகில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், குடிக்க தண்ணீர் வேண்டும் என்றும் அந்த இளைஞர்களிடம் கேட்டார்.

ஆனால் அந்த விமானி இந்தியாவை ஆதரித்து கோஷங்களை எழுப்பியதால் சுற்றி நின்ற இளைஞர்கள் கற்களால் அவரை தாக்க முயற்சித்தனர். உடனே துப்பாக்கியால் வானில் சுட்டவாறே அந்த விமானி ஓட ஆரம்பித்தார். அத்துடன் அவர் வைத்திருக்கும் முக்கிய ஆவணங்ளை காப்பாற்றும் முயற்சியில் வேகமாக ஓடி அருகில் இருந்த குளத்தில் மூழ்கி தான் வைத்திருந்த ஆவணங்களை அழிக்க முயற்சி செய்தார்.

அப்போது ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் அந்த விமானியின் காலில் காயம் ஏற்பட்டது. உடனே இளைஞர்கள் சுற்றி நின்று தாக்கத்தொடங்கினர். அப்போது அங்கு வந்த பாகிஸ்தான் ராணுவத்தினர் அந்த விமானியை பத்திரமாக மீட்டனர். அப்போது அவரின் பெயர், பதவி, மதம் உள்ளிட்ட விவரங்களைத் தவிர மற்ற எந்தவொரு தகவலையும் தெரிவிக்க மறுத்துவிட்டார். அவர் மிகவும் தைரியமாக காணப்பட்டார் என பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது ரசாக் சவுத்ரி என்பவர் தெரிவித்துள்ளார்.

INDIANAIRFORCE, INDIANPILOT, ABINANDHAN, PAKISTAN, SURGICALSTRIKES2

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்