'எக்ஸ்பிரஸ் சாலையில் தொடரும் சோகம்'...கோரமான விபத்தில் சிக்கிய பயணிகள் பேருந்து!
முகப்பு > செய்திகள் > India newsசாலையோரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது பயணிகள் பேருந்து மோதிய கோர விபத்தில் பெண்கள் குழந்தைகள் உட்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இதில் 30 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தனியார் டபுள் டெக்கர் பேருந்து ஒன்று,உத்தரபிரதேச மாநிலம் ஆரையாவில் இருந்து நொய்டா நோக்கி சென்றுக் கொண்டிருந்தது.யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில், கரோலி கிராமத்துக்கு அருகே இன்று அதிகாலை பேருந்து சென்று கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் ஓரமாக நின்று கொண்டிருந்த லாரி மீது அதிபயங்கரமான மோதியது.மோதிய வேகத்தில் பேருந்து அப்பளம் போல நொறுங்கியது.மேலும் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் தூக்கி வீசப்பட்டனர்.
இந்த கோர விபத்தில் பேருந்து டிரைவர், ஒரு குழந்தை, பெண் உட்பட 8 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.மேலும் 30 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.இதனிடையே யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வருவதாக அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளார்கள்.
அதிகாலையில் வாகனங்கள் வேகமாக வரும்போது அதிகப்படியான விபத்துகள் நடப்பதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளார்கள்.கடந்த ஆறு வருடங்களில் 705 பேர் இங்கு நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
OTHER NEWS SHOTS
தொடர்புடைய செய்திகள்
- நடுக்கடலில் கப்பலில் ஏற்பட்ட கோளாறு .. தடுமாறிய 1300 பயணிகள்.. திக் திக் நிமிடங்கள்!
- ‘சாலையைக் கடக்க முயற்சித்த பெண்’.. வந்த வேகத்தில் அடித்து தூக்கி வீசப்பட்டு விபத்து!
- ‘அதிக எடையால் மூழ்கிய கப்பல்’.. 100 பேர் பலி.. உலகை உலுக்கிய விபத்து சம்பவம்.. வீடியோ!
- 5 மாடி கட்டிட விபத்து: பலி எண்ணிக்கை அதிகரிப்பு.. சோகத்தில் ஆழ்ந்த மக்கள்!
- சென்னையில் 361 பாதசாரிகளை கொன்றது யார் ?.. அவசரமா?.. அலட்சியமா?.. பொறுமையின்மையா..?
- 'உண்மையிலேயே அதிர்ஷ்டம்னா இதுதானா'?...'2 நிமிஷம்' லேட்டா வந்து...வாழ்க்கையே மாறி போச்சு!
- லைசன்ஸ் இல்லாத துப்பாக்கியை இடுப்பில் சொருகியபடி வாக்கிங் சென்றவருக்கு நடந்த பரிதாபம்!
- 20 அடி உயரத்தில் இருந்து அருள்வாக்கு வழங்கிய பூசாரி தவறி விழுந்து பலியான சோகம்!
- அஞ்சு பேராக வந்ததால் நிகழந்த சோகம்.. சிசிடிவியில் வைரலான விபத்து சம்பவம்!
- சாலை விபத்தில் அதிமுக எம்.பி.ராஜேந்திரன் மரணம்!