450 நாளாக ‘இவர்’சாப்பிடுவது இந்த ஒரே ‘டிஷ்’தான்... அப்படி என்ன இருக்கு அதுல?
முகப்பு > செய்திகள் > Fun Facts newsபொதுவாகவே, நமக்கு பிடித்தமான உணவு என்று ஒன்றை நாம் முடிவு செய்துவிட்டால், அவற்றை விரும்பி சாப்பிடும் பொருட்டு, உண்மையில் மற்ற உணவுகளை முழுமையாக வெறுக்க மாட்டோம்.
பிடித்த உணவு வகைகளைப் போல், பிடிக்காத உணவு வகை என்று ஏதேனும் இருக்கும், அவற்றைத் தவிர்த்து பிடித்த ஒரு உணவுக்காக மற்ற எல்லா உணவு வகைகளையும் தொடுவதில்லை என்று நாம் முடிவு செய்துவிட முடியுமா? ஆனால் தனக்கு பிடித்துவிட்ட ஒரே காரணத்துக்காக அந்த ஒரு வகையான உணவை மட்டுமே 15 மாதங்களாக உண்ணும் ஒருவரைக் கண்டால் நமக்கு வியப்புத்தான் வரும். அப்படி வியப்பான ஒரு மனிதர் சமீபத்தில் வைரலாகியுள்ளார்.
பீஸா, பர்கர் போன்ற உணவுகளை விருப்ப உணவாக உண்ணுவது போலவே, தினமும் தனக்கான பிடித்தமான உணவான சிக்கன் ரைஸை மட்டுமே சுமார் 15 மாதங்களுக்கு மேலாக, அதாவது 450 நாட்களாக சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு மனிதர் உண்டு வந்திருக்கிறார். எப்படி சிக்கன் ரைஸுக்கு அடிமையானார் என்று தெரியாத இவர், தன்னை ஜேஜே ரசிகர், அதாவது சிக்கன் ரைஸ் ரசிகர் என்று கூறிக்கொள்கிறார்.
அதன்படி, தினமும் தான் உண்ணும் சிக்கன் ரைஸை புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, பக்கத்தில் எத்தனாவது நாளாக தொடர்ந்து சிக்கன் ரைஸை உண்ணுகிறார் என்றும் குறிப்பிடுவது இவரது ஸ்டைல். இதனால் இவரைப் போலவே சிக்கன் ரைஸ் பிரியர்கள் பலரும் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை பின் தொடருவதோடு, இவரின் போஸ்டுகளுக்கு லைக்ஸ்களை வாரி வழங்குகின்றனர்.
OTHER NEWS SHOTS
தொடர்புடைய செய்திகள்
- ‘மனைவியின் அன்பு மீது சந்தேகம்’..‘நடு ரோட்டில் கணவனின் கொடூர டெஸ்ட்’.. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்!
- ரயில்வே நடைமேடை மேம்பாலம் இடிந்து விழுந்து கோர விபத்து.. 5 பேர் பலி.. 35க்கும் மேல் படுகாயம்!
- ஒரே ஆளின் கிட்னியில் இருந்த 552 சிறுநீரகக் கற்கள்.. ஷாக் ஆன மருத்துவர்கள் செய்தது என்ன?
- 16 வயது சிறுமியை.. பாலியல் வன்கொடுமை செய்து.. உடலை சிதைத்து கொலை செய்த கொடூரம்.. பதற வைத்த சம்பவம்!
- லக்கேஜை போல் பெற்ற குழந்தைய மறந்துட்டு ஃபிளைட் ஏறி பறந்த, ‘பாசக்கார’ பெண்மணி!
- ‘மீனுக்கு எய்ம் பண்ணா..நீ யார்றா நடுவுல’.. போட்டோகிராபரை விழுங்கிய பின் திமிங்கலம் செய்த காரியம்’.. வைரல் வீடியோ!
- ‘திருமணத்துக்கு மறுத்த இளம்பெண்’.. ‘தீ வைத்து கொல்ல முயன்ற இளைஞன்’.. பரபரப்பு சம்பவம்!
- ஆன்லைனில் வீடியோ பார்த்து குழந்தை பெற்ற திருமணமாகாத பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!
- ‘கோலி ஒரு....’ கோடிட்ட இடத்தை நிரப்பிய வீரர்.. கோபமாகி வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!
- கணவரின் சந்தேக டார்ச்சரை பொறுக்க முடியாத போலீஸ் மனைவி துப்பாக்கியால் சுட்ட சம்பவம்!