"இனி சம்பள விஷயத்தில் இது கட்டாயம்"... 'தனியார் துறை ஊழியர்களுக்காக அதிரடி சட்டம்!'... 'UAE-க்கு குவியும் பாராட்டுக்கள்!!!'...
முகப்பு > செய்திகள் > வணிகம்ஐக்கிய அரபு அமீரகத்தில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் நிகரான சம்பளம் வழங்குவதற்கான சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் தனியார் துறையில் பணிபுரியும் ஆண், பெண் ஊழியர்களுக்கு சமமான ஊதியம் வழங்குவதற்கான புதிய சட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலிபா பின் சையது அல் நஹ்யான் பிறப்பித்த உத்தரவில், ஒரே வேலையில் பணிபுரியும் ஆணுக்கும், பெண்ணுக்கும் என்ன சம்பளம் வழங்க வேண்டும் என்பதை மார்க்கெட் நிலவரம்தான் முடிவு செய்ய வேண்டுமெ தவிர பாலினம் அல்ல எனக் கூறப்பட்டுள்ளது.
இதற்காக, அந்நாட்டின் பெடரல் சட்டம் எண் 08 பிரிவு 32-இல் சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனவும், இதன் நோக்கமே தனியார் துறையில் பாலின சமத்துவத்தை நிலைநாட்டுவதுதான் எனவும் கூறப்பட்டுள்ளது. சம்பளத்தில் சமத்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக மனிதவள அமைச்சகம் ஆகஸ்ட் 25ஆம் தேதியன்று புதிய உத்தரவை அமல்படுத்த முயற்சிகளை மேற்கொண்ட நிலையில், இதன் மூலம் பாலின சமத்துவத்தை உயர்த்தி பிடிப்பதில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அந்தஸ்து உயரும் என மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய சட்டத்திற்கு உலக அரங்கில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பெண்களின் அதிகாரமயமாதலுக்கு இந்த சட்டம் பேருதவியாக இருக்குமென வெளியுறவுத் துறை அமைச்சர் அன்வர் கர்காஷ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் உலக பொருளாதார மன்றத்தின் 2020ஆம் ஆண்டு அறிக்கையில், சம்பளத்தில் பாலின சமத்துவத்தை நிலைநாட்டுவதில் வளைகுடா நாடுகளிலேயே ஐக்கிய அரபு அமீரகம் முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'IT ஊழியர்களுக்கு இது செம சான்ஸ்!'... 'அடுத்தடுத்து பிரபல நிறுவனங்கள் வெளியிட்டுள்ள'... 'அசத்தல் அறிவிப்புகள்!!!'...
- VIDEO: "இன்னைக்கு ஆட்டம் சரவெடி தான்"!.. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு... ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரம்மாண்ட வரவேற்பு!.. MI vs KKR முக்கிய குறிப்புகள்!
- "மறுபடியும், முதல்ல இருந்தா??!"... - 'மீண்டும் இடியாக வந்து இறங்கும்... H1B விசா விவகாரம்!'... புதிய சிக்கலால் கலங்கி நிற்கும் IT ஊழியர்கள்!!!
- "அடுத்த 6 மாசம் அள்ளு விடப் போகுது!.. முடிஞ்சா இத பண்ணுங்க".. 'மீண்டும்' வேலையை காட்டும் 'கொரோனா'!.. அப்படியே 'அந்தர் பல்டி' அடித்த 'நாடு'!
- 'இப்போதான 22,000 பேர தூக்குனாங்க'... 'அதுக்குள்ள மறுபடியும் இத்தன ஆயிரம் பேரா?'... 'பிரபல நிறுவனம் கொடுத்த பேரதிர்ச்சியால்'... 'கலங்கி நிற்கும் ஊழியர்கள்!'...
- 'ஒற்றை புகைப்படம் சொன்ன பதில்!'.. ஐபிஎல் தொடரில் இருந்து 'மாயந்தி லாங்கர்' நீக்கப்பட்ட பின்னணி! நடந்தது இதுதான்!
- 'இனி சின்ன சின்ன ஊர்கள் தான் டார்கெட்'... 'தமிழ்நாட்ல எந்த ஊர்?'... IT ஊழியர்களுக்கு 'ஜாக்பாட்' அறிவிப்பை வெளியிட்ட பிரபல சாஃப்ட்வேர் நிறுவனம்!...
- '6,000 பேருக்கு வேலை, 60,000 பேருக்கு டிரெய்னிங்'... 'அதுவும் எங்க தெரியுமா?'... 'அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ள பிரபல குழுமம்!'...
- 'சம்பளமே ஒழுங்கா குடுக்கல'... 'பிரபல நிறுவனத்தின் அடுத்தடுத்த விதிமீறல்களால்'... 'அதிரடி நடவடிக்கை எடுத்த அரசு'... 'ஹேப்பி மோடில் ஊழியர்கள்!...
- 'எவ்ளோ எச்சரிச்சோம்?'...'அடுத்த 15 நாட்களுக்கு இந்தியாவில் இருந்து செல்லும் பிரபல விமான சேவைக்கு தடை போட்ட துபாய்'!.. பரபரப்பு பின்னணி!