'இனி ஊழியர்களுக்கு அந்த கவலை வேண்டாம்'... 'மகிழ்ச்சி செய்தியை வெளியிட்டுள்ள பிரபல நிறுவனங்கள்!'...
முகப்பு > செய்திகள் > வணிகம்இந்தியாவின் பல முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் அதன் ஊழியர்களுக்கு முழுச் சம்பளத்தைக் கொடுக்கத் துவங்கியுள்ளன.
இந்தியாவில் கொரோனா பாதிப்பால் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் நாட்டின் மொத்த வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் முடங்கியுள்ளது. இதையடுத்து அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அதைச் சமாளிக்க செலவின குறைப்பில் இறங்கின. இந்தியாவில் இருக்கும் 90 சதவீத ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பதன் மூலம் அதிகளவிலான பணத்தை இக்காலகட்டத்தில் சேமித்தன.
இந்நிலையில் இந்தியாவில் இன்னும் கொரோனா பாதிப்பு முழுமையாகக் குறையாத நிலையிலும், 5 மாதங்களாகச் சம்பள குறைப்பு செய்துவந்த பல முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் அதன் ஊழியர்களுக்கு முழுச் சம்பளத்தைக் கொடுக்கத் துவங்கியுள்ளன. இந்தியாவின் முன்னணி ஹாஸ்பிடாலிட்டி நிறுவனமான ஓயோ ரூ 8 லட்சம் வரையில் சம்பளம் பெறும் அனைத்து ஊழியர்களுக்கும் முழுச் சம்பளம் கொடுப்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் அந்நிறுவனத்தின் 60 சதவீத ஊழியர்கள் முழுச் சம்பளத்தை வாங்க உள்ளனர். மற்ற ஊழியர்களுக்கும் 12.5 - 25 சதவீத சம்பளம் மட்டுமே இனி வரும் மாதங்களில் குறைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல சில வாரங்களுக்கு முன்பு அப்கிராட், சோமேட்டோ, க்ரோபர்ஸ் ஆகிய நிறுவனங்களும் ஊழியர்களுக்கு முழுச் சம்பளத்தைக் கொடுப்பதாக அறிவித்திருந்த நிலையில், பல நிறுவனங்களும் இந்த மாதம் தனது ஊழியர்களுக்கான சம்பள உயர்வு மற்றும் போனஸ் ஆகியவற்றைக் கொடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கொரோனாவுக்கு மத்தியிலும்... பிரபல ஷோரூமில் 'சேல்ஸ்மேன்' பணிக்கு சேர்ந்த தெருநாய்... என்ன காரணம்?
- ”சம்பளமா கேக்குற...? இந்தா, நல்லா கடி வாங்கு...!” - ’ஊழியர்’ மேல் நாயை ஏவிவிட்ட ’மஸாஜ் சென்டர்’ உரிமையாளர்... பல்லு ஒடையற அளவுக்கு ’கடித்து’ குதறிய நாய்!
- VIDEO: ‘பசியோட கூட இருப்போம்’.. ‘ஆனா அதமட்டும் பண்ண மாட்டோம்’.. பரபரப்பை கிளப்பிய ‘ஜொமோட்டோ’ ஊழியர்கள்..!
- ஸ்விக்கி, ஜொமேட்டோவுக்கு டஃப் கொடுக்க ரெடியான ‘அமேசான்’.. முதல்ல ‘இந்த’ மாநிலத்துல இருந்துதான் ஆரம்பம்..!
- "3.2 லட்சம் பயனாளர்கள்.. வேலைக்கு வேலையும் ஆச்சு.. கல்விக்கு கல்வியும் ஆச்சு!".. நெகிழவைத்த இன்போசிஸ்!
- "இந்த கொரோனா நேரத்துலயும், நெஞ்சுல பாலை வார்த்துட்டாங்க!"... 22 பில்லியன் டாலர் முதலீட்டில் அசத்திய 155 இந்திய நிறுவனங்கள்! .. நெகிழ்ந்துபோன அமெரிக்க வாழ் இந்தியர்கள்!
- "கொரோனாவால கம்பெனிகள் எல்லாம் ஆட்குறைப்பு, சம்பள குறைப்பு பண்ணிகிட்டு இருக்கு!".. ஆனா இந்த நிறுவனம் பண்றத பாருங்க! வேறலெவல்!
- 'சவக்குழிக்குள்' சடலத்தை 'தள்ளிவிட்ட' ஊழியர்கள்... 'வருத்தம் தெரிவித்த முதல்வர்...' 'அலட்சியம்' காட்டிய மூவர் 'பணியிடை நீக்கம்...'
- 'கண்ணுங்களா இப்படி செஞ்சா என்ன அர்த்தம்'... 'ட்விட்டரில் சொமாட்டோ கேட்ட கேள்வி'... நெட்டிசன்களின் அல்டிமேட் பதில்!
- இவங்களுக்கும் 'ஊதியம் பிடித்தமா...?' 'தமிழகம்' முழுவதும் 'நாளை போராட்டம்..!'