'கொரோனா பாதிப்புக்கு நடுவிலும்'... 'IT துறையில் 23,000 பேருக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்?!!'... 'அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ள காக்னிசன்ட்!!!'...

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

பிரபலமான ஐடி நிறுவனமான காக்னிசன்ட் (Cognizant) மகிழ்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

காக்னிசன்ட் நிறுவனத்தில் சமீபமாக இந்திய நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்ட ராஜேஷ் நம்பியார் அடுத்த ஆண்டில் இந்தியாவில் கேம்பஸ் இண்டர்வியூ மூலம் 23,000 பேரை பணியமர்த்த உள்ளோம் எனத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர், "இந்தியாவில் எங்கள் ஊழியர்கள் செய்யும் மிகப்பெரிய பணிகளால் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். மேலும் உலகளாவிய ஊழியர்களில் கிட்டதட்ட 70% பேர் இந்தியாவில் உள்ளனர்.

இந்தியா ஒரு மதிப்புமிக்க சொத்தாகவும், உலகளாவிய விநியோகம், கண்டுபிடிப்பு திறனின் முக்கிய மையமாகவும் உள்ளது. இதனால் தான் நாங்கள் இந்தியாவில் எங்களது செயல்பாடுகளை தொடர்ந்து செய்கிறோம். இந்தியாவில் உள்ள முன்னணி கல்வி நிறுவனங்களில் இருந்து தொடர்ந்து கேம்பஸ் மூலம் பணியமர்த்தலை தொடர்ந்து வருகிறோம். காக்னிசன்ட் தொடர்ந்து அதிக ஊழியர்களை தேர்வு செய்யும் நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

நடப்பு ஆண்டில் கேம்பஸ் மூலம் ஏறக்குறைய 17,000 பேரை பணியில் அமர்த்தியுள்ளோம். இது கடந்த 2016ல் இருந்து ஒப்பிடும்போது மிக அதிகம். அடுத்த ஆண்டில் இந்தியாவில் கேம்பஸ் இண்டர்வியூ மூலம் 23,000 பேரை பணியமர்த்த உள்ளோம். குறிப்பாக இந்த பணியமர்த்தல் நல்ல திறன் வாய்ந்த டிஜிட்டல், கிளவுட் சேவை, டேட்டா, டிஜிட்டல் இன்ஜினியரிங், சைபர் செக்யூரிட்டி, சேல்ஸ்போர்ஸ், வணிக நவீனமயமாக்கல் உள்ளிட்டவைகள் முக்கிய பகுதிககளாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்