'கொரோனா பாதிப்பால் விப்ரோ எடுத்துள்ள முடிவு'... 'வெளியான புது அறிவிப்பால் மகிழ்ச்சியில் ஊழியர்கள்!!!'...

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

விப்ரோ நிறுவனம் அதன் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணி புரிவது குறித்து புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் 2021 ஏப்ரல் 4 வரை அதன் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணிபுரிய அனுமதித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக பல நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்தி வரும் நிலையில், குறிப்பாக ஐடி நிறுவனங்கள் பெரும்பாலும் அதன் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணி புரிய அனுமதித்துள்ளது. அந்த வகையில் தான் தற்போது விப்ரோ ஊழியர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் விப்ரோ மொத்த ஊழியர்களில் 98% பேர் தற்போது வீட்டில் இருந்து பணிபுரிந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர மற்ற ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் மார்ச் 2021 வரை வீட்டில் இருந்து வேலை பார்க்க அறிவுறுத்தியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. இதே போல ஆல்பாஃபெட்டின், கூகுள் நிறுவனம் செப்டம்பர் 2021 வரையில் அதன் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற கடந்த வாரத்தில் அனுமதித்துள்ளன.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்